#JUST IN: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஜாக்பாட்.! ரூ.15,000 குறைந்தது.!

Gold Price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மே 13-ம் தேதி நள்ளிரவு முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என்றே கணிக்கப்பட்டது.

அதற்கேற்பவே மே 13-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.5,360 உயர்ந்தது. நேற்று காலை ரூ.800 குறைந்த தங்கத்தின் விலை, மாலையில் மீண்டும் ரூ.1,480 குறைந்தது.

இதன்படி நேற்று (மே 15) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,280 குறைந்து, ரூ.1,18,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.285 குறைந்து ரூ.14,765-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 16) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,18,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.290-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம் முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை: மத்திய அரசின் அதிரடி முடிவுகளும், பொதுமக்களின் தவிப்பும்.!
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 15: 1 கிராம் - ரூ.14,765 1 சவரன் ரூ.1,18,120

மே 14: 1 கிராம் - ரூ.15,050 1 சவரன் ரூ.1,20,400

மே 13: 1 கிராம் - ரூ.15,000 1 சவரன் ரூ.1,20,000

மே 12: 1 கிராம் - ரூ.14,330 1 சவரன் ரூ.1,14,640

மே 11: 1 கிராம் - ரூ.14,100 1 சவரன் ரூ.1,12,800

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Gold Price

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com