#JUST IN: தங்கத்தை இனி போட்டோல தான் பார்க்கணுமா? எகிறியது தங்கம் விலை.!

Gold
Goldimage credit : ETV Bharat
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில் மே 13-ம் தேதி நள்ளிரவு முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

நேற்று (மே 18) தங்கம் மாற்றமில்லாமல் அதே விலைக்கு விற்பனையானது. ஆனால் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்தது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,18,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,750-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.300-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 19) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்து, ரூ.1,18,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,870-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: இனி ஆதார் கார்டில் மொபைல் எண்ணை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்..!
Gold

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 18: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

மே 17: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

மே 16: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

மே 15: 1 கிராம் - ரூ.14,765 1 சவரன் ரூ.1,18,120

மே 14: 1 கிராம் - ரூ.15,050 1 சவரன் ரூ.1,20,400

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
Gold
logo
Kalki Online
kalkionline.com