#JUST IN: முதல் நாளே எகிறியது தங்கம் விலை.! இல்லத்தரசிகள் ஷாக்.!

gold price
gold priceimage credit-dailynewsegypt.com
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்நிலையில் மே 13-ம் தேதி நள்ளிரவு முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

நேற்று (மே 24) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,17,840-க்கும், ஒரு கிராம் ரூ.14,730-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.295-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 25) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,780-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் 80% ஆறுகள்..! தண்ணீருக்குள் காத்திருக்கும் பேராபத்து.!
gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 24: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

மே 23: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

மே 22: 1 கிராம் - ரூ.14,780 1 சவரன் ரூ.1,18,240

மே 21: 1 கிராம் - ரூ.14,810 1 சவரன் ரூ.1,18,480

மே 20: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

மே 24: 1 கிராம் - ரூ.295

மே 23: 1 கிராம் - ரூ.295

மே 22: 1 கிராம் - ரூ.295

மே 21: 1 கிராம் - ரூ.290

மே 20: 1 கிராம் - ரூ.285

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
gold price