#JUST IN: ரூ.5,000 சரிவு.! தங்கம் வாங்க உடனே போங்க.. ஜாக்பாட் ஆஃபர்.!

gold price
gold price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

கடந்த 2 நாட்களில் ரூ.1,040 வரை தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று (மே 27) தங்கத்தின் விலை ரூ.640 குறைந்த நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனையானது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 28) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 குறைந்து, ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.285-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,85,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
இனி தொழில் தொடங்க 21 நாட்கள் போதும்.! அமைச்சர் கீர்த்தனா அதிரடி.!
gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 27: 1 கிராம் - ரூ.14,650 1 சவரன் ரூ.1,17,200

மே 26: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

மே 25: 1 கிராம் - ரூ.14,780 1 சவரன் ரூ.1,18,240

மே 24: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

மே 23: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

மே 27: 1 கிராம் - ரூ.290

மே 26: 1 கிராம் - ரூ.295

மே 25: 1 கிராம் - ரூ.295

மே 24: 1 கிராம் - ரூ.295

மே 23: 1 கிராம் - ரூ.295

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ரயில் பயணிகள் ஷாக்..! ஜூன் 1 முதல் ரயில் உணவுகளின் விலை உயர்கிறது..!
gold price
logo
Kalki Online
kalkionline.com