#JUST IN: 2-வது நாளாக அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.! மளமளவென உயர்ந்தது.!

Gold price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

நேற்று (மே 29) தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,600-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 30) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,17,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,630-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனையாகிறது

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
Gold price

கடந்தும் 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 29: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800

மே 28: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

மே 27: 1 கிராம் - ரூ.14,650 1 சவரன் ரூ.1,17,200

மே 26: 1 கிராம் - ரூ.14,730 1 சவரன் ரூ.1,17,840

மே 25: 1 கிராம் - ரூ.14,780 1 சவரன் ரூ.1,18,240

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

மே 29: 1 கிராம் - ரூ.290

மே 28: 1 கிராம் - ரூ.285

மே 27: 1 கிராம் - ரூ.290

மே 26: 1 கிராம் - ரூ.295

மே 25: 1 கிராம் - ரூ.295

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
Gold price
logo
Kalki Online
kalkionline.com