45 வகை மருந்துகளின் விலை மாற்றம்!

45 வகை மருந்துகளின் விலை மாற்றம்!
Published on

இந்தியாவில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளில் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

இந்தியாவில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில், அவற்றின் தயாரிப்பு மருந்துகளின் விலையும் மாற்றியமைக்கப் படுகின்றன.

அதன்படி சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், உள்ளிட்ட பல நோய்களுக்கான மாத்திரைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரையின் விலை 16 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை குறைந்துள்ளது.

மேலும் அலர்ஜி மற்றும் சளி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமல், பினைல் பிறைன், ஹைட்ரோ குளோரைடு ஆகிய வகை மாத்திரைகளின் விலை 3.73 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளின் விலை 163.43 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com