

கவாஸாகி இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற நிஞ்சா (Ninja) சீரிஸ் பைக்குகளுக்கு ஜூன் மாதத்திற்கான அதிரடி சலுகைகளையும், சிறப்பு தள்ளுபடிகளையும் (குறிப்பாக Ninja ZX-10R பைக்குக்கு ரூ.2.89 லட்சம் வரை) அறிவித்துள்ளது. விற்பனையாகாத மாடல்களைக் காலி செய்யும் வகையில் இந்தச் சலுகைகள் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
கவாஸாகி (India Kawasaki Motors) என்பது மோட்டார் சைக்கிள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற இயந்திரங்களை தயாரிக்கும் ஒரு புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமாகும். பந்தய மோட்டார் சைக்கிள்களுக்கு (Racing bikes) உலகளவில் மிகவும் பிரபலமான இந்நிறுவனம், இந்தியாவில் நடுத்தர மற்றும் அதிவேக பைக்குகளை விற்பனை செய்கிறது.
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் 1953-ம் ஆண்டு முதல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து (India Kawasaki Motors) தனது உற்பத்தியை வழங்கி வருகிறது.
இது இந்தியாவில் நிஞ்ஜா (Ninja), Z சீரிஸ், வெர்சிஸ் (Versys) மற்றும் வல்கன் (Vulcan) போன்ற பல புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர்பைக் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்கிறது.
இந்நிலையில் கவாஸாகி இந்தியா தனது நிஞ்சா வரிசையில் இடம்பெறும் இசட் எக்ஸ் 10 ஆர்(ZX-10R), இசட் எக்ஸ் 6 ஆர்(ZX-6R) மற்றும் நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ். மாடல்களுக்கு வரும் ஜூன் 30-ம்தேதி வரை யாராலும் கற்பனை செய்ய முடியாத அதிரடி சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
நிஞ்சா ZX-10R (Ninja ZX-10R): இதில் இசட் எக்ஸ் 10 ஆர்(ZX-10R) பைக்கிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி தள்ளுபடியாக ரூ.2.89 லட்சம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.90 லட்சமாக குறைந்துள்ளது. மற்ற பைக்குகளை விட இசட் எக்ஸ் 10 ஆர்(ZX-10R) மாடல் பைக்கிற்கு தான் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.2,89,000 வரை தள்ளுபடியை பெறலாம். ஆனால், ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த பைக்கிற்கான இன்சூரன்ஸ் மற்றும் பதிவு கட்டணங்கள் பைக்கின் அசல் விலையான ரூ.20,79,000-ன் அடிப்படையிலேயே கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிஞ்சா 1100SX (Ninja 1100SX): இந்த ஸ்போர்ட்-டூரர் ரக பைக் பிரியர்களின் விருப்பமான நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ். வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கிட் (Pannier kit) அல்லது ரூ.11,050 மதிப்பிலான உயரமான விண்ட்ஸ்கி ரீன் (Tall windscreen) இலவசமாக வழங்கப்படுகிறது.
நிஞ்சா ZX-6R (Ninja ZX-6R): இந்த மாடலுக்கு ரூ.2.74 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.98,000 மதிப்பிலான ஆக்சஸரீஸ் பேக்கை (Accessories Pack) ரூ.69,000-க்கு பெறலாம்.
பிற மாடல்கள்: நிஞ்சா 300, நிஞ்சா 500 மற்றும் நிஞ்சா 650 போன்ற சிறிய மாடல்களுக்கும் தள்ளுபடிகள் மற்றும் இலவச ஆக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன.
இதே போன்ற சலுகைகளை கவாஸாகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது ZX-10R பைக்குக்கு மட்டுமே வெறும் ரூ.1.43 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
எனவே, தற்போதைய சலுகை உண்மையிலேயே ஒரு அரிய பொன்னான வாய்ப்பாகும். இந்த அதிரடி சலுகைகள் இந்த சலுகைகள் நாடு முழுவதும் உள்ள கவாஸாகி டீலர்ஷிப்களில் ஜூன் 30-ம்தேதி வரை செல்லுபடியாகும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் கிடைக்கும் இருப்பை பொறுத்து சலுகைகள் மாறக்கூடும் என்பதால் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி கொள்வது நல்லது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹூண்டாய், மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜூன் மாதம் தங்களுடைய பல பிரபலமான மாடல்களுக்கு கிட்டத்தட்ட ரூ.3.50 லட்சம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்திருந்தன.
அதனை தொடர்ந்து தற்போது கவாஸாகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் இடையே கவனத்தை பெற்றுள்ளது.