ஆன்மிக சுற்றுலா: ரூ.1350 கட்டணம்... ஒரே நாளில் 14 வைணவ கோவில்களை தரிசிக்கலாம்..!!

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் ஆன்மிக சுற்றுலா பேருந்தை இயங்குகிறது.
ஆன்மீக சுற்றுலா
ஆன்மீக சுற்றுலாAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோவில்களை தரிசிக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ஆன்மிக சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் தரிசன சுற்றுலா, கும்பகோணத்தில் நவகிரக கோவில் சுற்றுலா என, பக்தர்கள் எளிதாக பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆடி மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச திருக்கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் புதிய ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச திருக்கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று தரிசனம் செய்து திரும்பும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் வகையில் இந்த ஆன்மீக சுற்றுலா சேவை இயக்கப்படுகிறது.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இந்த ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு பேருந்தில் புறப்பட்டு 14 திருக்கோவில்களில் தரிசனம் செய்து முடித்த பின்னர், இரவு 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும் வகையில் பயண அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது.

கும்பகோணம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய வைஷ்ணவ திருக்கோவில்களை உள்ளடக்கியதாக இந்த புதிய ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்மிக சுற்றுலா பயணத்தில் பின்வரும் 14 ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச திருக்கோவில்களை பக்தர்கள் தரிசிக்கலாம்:

spiritual tour
spiritual tourAI Image

ஸ்ரீ திருவாழிமார்பன் விண்ணகரம் எனும் ஸ்ரீ தாடாளன் பெருமாள் திருக்கோவில் – சீர்காழி

அண்ணன் பெருமாள் கோவில் – திருவள்ளக்குளம்

ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கோவில் – திருநகரி

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் – திருமணிக்கூடம்

ஸ்ரீ வைகுண்ட நாதர் திருக்கோவில் – வைகுண்ட விண்ணகரம்

ஸ்ரீ வண்புருஷோத்தமன் பெருமாள் திருக்கோவில் – திருநாங்கூர்

ஸ்ரீ செம்பொன் அரங்கர் திருக்கோவில் – திருநாங்கூர்

ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில் – திருத்தெற்றியம்பலம்

ஸ்ரீ குடமாடும் கூத்தர் திருக்கோவில் – அரிமேய விண்ணகரம்

ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோவில் – மணிமாடக்கோயில்

திரு பரிமள ரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் – திருஇந்தளூர், மயிலாடுதுறை

ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் – சங்கநல்லூர் / சேங்கனூர்

ஸ்ரீ நாச்சியார் நம்பி திருக்கோவில் – நாச்சியார் கோவில்

ஸ்ரீ சாரங்கபாணி (ஆராவமுதன்) பெருமாள் திருக்கோவில் – திருக்குடந்தை.

இதையும் படியுங்கள்:
மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா - 3: புனித க்ஷிப்ரா நதி & மகாகாளேஸ்வரர் தரிசனம்
ஆன்மீக சுற்றுலா

14 வைணவ ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,350 நிர்ணயித்துள்ளது.

பக்தர்கள் இந்த ஆன்மிக சுற்றுலா பேருந்தில் பயணம் செய்ய www.tnstc.in இணையதளம், TNSTC Mobile App அல்லது கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரே நாளில் பல திவ்ய தேச கோயில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு, இந்த ஆன்மிக பயணம் ஒரு அரிய வாய்ப்பாகவும் மிகுந்த மனநிறைவைத் தரும் அனுபவமாகவும் அமையும்.

இதையும் படியுங்கள்:
மத்தியப் பிரதேச ஆன்மிக சுற்றுலா - 1: சென்னை டூ இந்தூர் பயணம்: ஓம்காரேஷ்வர் தரிசனம்
ஆன்மீக சுற்றுலா

குறிப்பாக கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com