

சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாவட்டம் வாரியாக 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator - DEO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் e-Sewa Kendra மையங்களில் பணிபுரிய Data Entry Operator பதவிக்கு மொத்தம் 115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் தற்காலிக (ஒப்பந்த) நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? மாவட்ட வாரியாக எத்தனை காலியிடங்கள் உள்ளன? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு - பணியிடங்கள் விவரம்:
அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம்
பணிபுரியும் இடம்/பகுதி : இ-சேவா கேந்திரா
மொத்த காலியிடங்கள்: 115
பணியிடம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பதவி பெயர்: Data Entry Operator
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கல்வித் தகுதி:
B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT). உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.09.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் 35 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.
வயது தளர்வு அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு விதிமுறைகள் பொருந்துமா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளுடன் சரிபார்க்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?:
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இந்தப் பணி நிரந்தர அரசு பணி அல்ல; முற்றிலும் இது ஒப்பந்த (Contract Staff )அடிப்படையிலான பணியாகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
சென்னை உயர்நீதிமன்றம் Data Entry Operator வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணல் மட்டும் நடத்தப்படாது. முதலில் Written-cum-Skill Test நடைபெறும். அதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படையில் Viva Voce தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறையை பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/esk_rec என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.09.2026 ஆம் தேதி வரை விண்னப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் :10.10.2026 / 11.10.2026 ஆகும்.
நேர்முகத் தேர்வு (Viva voce): 24.10.2026 / 25.10.2026 அன்று நடைபெறும்.
அனைத்து தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.