பக்தர்கள் கவனத்திற்கு! மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தரிசன டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

Meenakshi Amman Thirukalyanam
Meenakshi Amman Thirukalyanam
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கான டிக்கெட் முன்பதிவு 19ஆம் தேதி தொடங்குகிறது. இணையதளம் மூலமாகவும் டிக்கெட்டுகளைப் பெறலாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 28, 2026 அன்று நடைபெற உள்ளது. திருக்கல்யாண நேர்முக தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 19 முதல் 22, 2026 வரை maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெறும். கட்டண சீட்டுகள் ரூ.500 மற்றும் ரூ.200 என இரண்டு வகைகளில் கிடைக்கும். முன்பதிவு எண்ணிக்கை அதிகமானால் குலுக்கல் முறை மூலம் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முன்பதிவு முடிந்ததும் ஏப்ரல் 23 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் SMS/ மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏப்ரல் 24 முதல் 27 வரை எலிஸ் நகர் யாத்ரி நிவாஸில் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெறலாம். மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
மேடையில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா..!
Meenakshi Amman Thirukalyanam
logo
Kalki Online
kalkionline.com