

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதியின்படி இதற்கான பணிகள் மற்றும் வழிமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது நீண்ட செயல்முறை என்பதால் முதலமைச்சர் விஜய் கொஞ்சம் நேரம் கேட்டுள்ளார் என்றார்.
முக ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 2023 செப்டம்பர் 15-ம்தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாக உள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையானது, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
அதாவது தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தவெக சார்பில் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதாவது, 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் பெயர் உடனடியாக மாற்றப்பட்டு மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் இந்த மாதமே ரூ.2500 வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேசமயம், தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் சபை தேர்தலில் திராவிட கட்சிகளை வீழ்த்தி பெரும்பான்மையுடன் தவெக ஆட்சியை பிடித்தது முதல் திமுக சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பெண்களுக்கான 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என பொதுமக்களும், எதிர்கட்சியினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-ல் இருந்து 2,500-ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என்றார்.
உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது நீண்ட செயல்முறை என்பதால் முதலமைச்சர் விஜய் கொஞ்சம் நேரம் கேட்டுள்ளார் என்றும் தேர்தல் வாக்குறுதியின்படி இதற்கான பணிகள் மற்றும் வழிமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொஞ்சம் டைம் எடுக்கும். கண்டிப்பாக, உறுதியாக 2500 ரூபாய் பணம் உங்களுக்கு வழங்கப்படும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
பொதுவாக, இந்தத் திட்டம் பெண்களுக்கு ஒரு சிறிய, அதேசமயம் நிலையான வருமானத்தைக் கொடுப்பதால், இது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதுடன், விரைவில் ரூ.2500 உயர்த்தி தரவேண்டும் என்பதில் பெண்கள் உறுதியாக உள்ளனர்.
அதேசமயம் புதிய ஆட்சியில் தகுதியற்றவர்களை நீக்கிவிட்டு, உண்மையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உரிமைத்தொகை கிடைக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.