ரூ.10,000 சரிவு.! தங்கம் மட்டுமில்ல வெள்ளியும் குறைஞ்சிருக்கு.! செம லக் தான் இன்னிக்கு.!

தங்கம், வெள்ளி விலை.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 21) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை அதிரடியாக ஒரு கிலோ ரூ.10,000 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை ஆயுத பூஜை தினத்தன்று ரூ.280 உயர்ந்த நிலையில், நேற்று விஜயதசமி தினத்தில் ரூ.640 குறைந்தது.

பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரத் தொடக்கத்தில் உயர்ந்து, அடுத்த நாளே இருமடங்குக்கும் மேல் சரிந்தது. இந்த சரிவு சிறிதளவே என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் விலை சரிவு தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 20) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை நேற்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 21) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று விஜயதசமி தினத்தில் தங்கத்தின் விலை சரிந்த சூழலில், இன்று மீண்டும் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.1,440 குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வெறும் ரிவ்யூ எழுதி பல லட்சங்களை இழந்த அவலம் - ஆன்லைனில் பணத்தை இழக்காமல் தப்பிப்பது எப்படி?
தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் வெள்ளியில் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக 1 கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையாகி வந்தது. அதன்பிறகு 1 கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையானது. இந்நிலையில் இதற்குப் பின் மீண்டும் வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாவதால், ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்போது விலையில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், விரைவில் விலை உயர்ந்து தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்களும், நகைக் கடை வியாபாரிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்தக் கணிப்புகள் மெய்யாகுமா அல்லது சாமானிய மக்கள் எதிர்பார்ப்பது போல விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
2026 தீபாவளி: பட்டாசு வெடிக்கும் டைமிங் இதுவா? பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com