வீட்டில் கணவன், மனைவி இருவரும் சம்பாதிப்பவரா..? பட்ஜெட்டில் நடைமுறைக்கு வரும் புதிய வரி திட்டம்..!

மத்திய பட்ஜெட்டில் தம்பதிகளுக்கு ‘விருப்ப கூட்டு வரிவிதிப்பு’ முறையை, அதாவது joined taxation என்ற முறையை அறிமுகப்படுத்த ICAI பரிந்துரை செய்துள்ளது.
joint taxation
joint taxationimage credit-timesofindia.indiatimes.com
Published on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய போகும் பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது.

குறிப்பா வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வரி அட்டவணை எப்படி மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் திருமணம் ஆன தம்பதிகளுக்கு ‘விருப்ப கூட்டு வரிவிதிப்பு’ முறையை, அதாவது joined taxation என்ற முறையை அறிமுகப்படுத்த இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) பரிந்துரை செய்துள்ளது.

அதாவது திருமணம் ஆனவர்கள் எல்லாம் சேர்ந்தே வரி கட்டுவதற்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த ICAI மத்திய அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது. வரும் 1-ம்தேதி மத்திய பட்ஜெட்டில் இது அறிமுகப்படுத்தப்படுமா அப்படி அறிமுகப்படுத்தினால் வரி செலுத்தும் தம்பதிகளுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும், இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..

இதையும் படியுங்கள்:
மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் பட்ஜெட் தள்ளிவைப்பு!
joint taxation

வருமானம் வாங்கும் அனைவரும் அவரவர் வாங்கும் வருமானத்திற்கு ஏற்ற வகையில் வரி செலுத்துகிறோம். அந்த வகையில் இனி வரும் காலங்களில் கணவன், மனைவியாக இருப்பவர்கள், இரண்டு பேருமே சம்பாதிக்கிறார்கள் எனும் போது தனித்தனியாக வரி செலுத்தாமல், இரண்டு பேருமே சேர்ந்தே வரி செலுத்துவதற்கான திட்டம் தான் இந்த ‘விருப்ப கூட்டு வரிவிதிப்பு’. இந்த திட்டத்தை 2026 மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த ICAI பரிந்துரை செய்துள்ளது.

ICAI இந்த திட்டத்திற்கு என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இப்போது உள்ள நடைமுறை வரிமுறைப்படி நாம் நம்முடைய வருமானத்திற்கு ஏற்றமாதிரி எப்படி முறையாக வரி கட்டுவது என்று தெரியாமல் தனித்தனியாக வரி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுவே joined taxation திட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினால் தனிநபர் வருமான வரி செலுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும் என்று ICAI தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் எப்படி தம்பதிகளுக்கு உதவும், இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்னவென்று பார்க்கலாம் வாங்க..

* குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் வருமானம் வாங்குபவர், மனைவி குடும்பத்தலைவி என்றால், வருமான வரி சட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.4 லட்சமாகும். இது விருப்ப வரிச்சலுகையில் கீழ் ரூ.2.50 லட்சம் வரைக்கும் உரிமை பெறமுடியும். joined taxation முறையில் வருமான வரி தாக்கம் செய்யும் போது குறைந்த வரிப்பொறுப்பு என்பதால் combined Exception மூலமாக வரிசுமையை குறைக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டுகிறார் என்றால் இது பொருந்தும்.

* அதுவே ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் குறைந்த அளவிலேயே அவர்களது வருமானம் உள்ளது என்றால், அவர்கள் joined taxation முறையில் பயன்படுத்தும் போது அதிக அடிப்படை விலக்கு(Higher basic Exemption), நிலையான விலக்குகளில்(standard deduction) இருந்து அவர்கள் பயன்பெற முடியும். இது tax slab வரம்புகளை பொறுத்து இரண்டு தனித்தனி வருமானங்களுக்கும் குறைவான வரி செலுத்த வாய்ப்பு இருக்கும் என்பது மற்றொரு முறை.

* அதேசமயம், இரண்டு பேருமே அதிக வருமானம் ஈட்டும் தம்பதிகளாக இருந்தால் இந்த joined taxation முறை பாதகமாக அமையலாம்.

இரண்டு பேரின் சம்பளத்தையும் கூட்டும்போது அதிக தொகை வரும் என்பதால் அவர்கள் tax slabல் உயர் அடுக்கு இருக்கும் இடத்திற்கு அவர்கள் போய்விடுவார்கள். இவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

தம்பதிகள் குடும்பம், குழந்தைகளுடன் இருக்கிறார்கள் என்றால் வீட்டு கடன், மருத்துவ செலவு, கல்வி செலவு போன்ற செலவுகள் இருக்கிறது என்றால் இவர்களுக்கு joined taxation முறை சிறப்பான திட்டமாகும். 80C,80D மாதிரியான விலக்குகள் இவர்களுக்கு கிடைக்கும். இதனால் வரி செலுத்துபவர்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் joined taxation முறை நடைமுறைக்கு வந்தால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இதற்கிடையே இந்த முறைக்கு ICAI வரி அடுக்குகளை மறுசீரமைக்கவும் முன்மொழிந்துள்ளது.

உதாரணமாக ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. இதுவே ரூ.6 லட்சம் வரைக்கும் எனும் போது வரி இல்லை என்பது போல் மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கும். அதாவது ICAI என்ன பரிந்துரைத்துள்ளனர் என்றால் ரூ.6 லட்சம் வரைக்கும் வரி செலுத்த வேண்டாம். அதுவே ரூ.6 முதல் 14 லட்சம் வரைக்கும் வருமான உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரை வரி மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை செய்துள்ளது.

தம்பதிகள் இருவரும் சேர்ந்து joined taxation File செய்யும் போது அவர்களுக்கு ICAI tax slab எப்படி மாறும் என்பதற்கான வரைமுறையையும் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்!
joint taxation

* தம்பதிகள் இருவரின் வருமானமும் சேர்ந்து ரூ.8 லட்சம் வரைக்கும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வரி கிடையாது.

* ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ரூ.16 லட்சத்திற்கு மேல் ரூ.24 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ரூ.24 லட்சத்திற்கு மேல் ரூ.32 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ரூ.32 லட்சத்திற்கு மேல் ரூ.40 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ரூ.40 லட்சத்திற்கு மேல் ரூ.48 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ரூ.48 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இதேபோல் கூடுதல் வரி விதிப்பு முறையிலும் மாற்றத்தை கொண்டு வர ICAI பரிந்துரை செய்துள்ளது.

வருமான வரி மீதான கூடுதல் வரி என்பது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது பொருந்தும். வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த கூடுதல் வரி கிடையாது. அதுவே அவர்களுக்கு வருமானம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்குள் இருக்கிறது என்றால் 10 சதவீதத்தில் இருந்து கூடுதல் வரி விதிக்கப்படும்.

அதன்படி நாம் பாக்கும் போது கூடுதல் வரி வசூலிப்பதற்கான வரம்பு தற்போது ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக மாற்றத்திற்கான பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. அதாவது உங்களது ஆண்டு வருமானம் ரூ.75 லட்சமாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கூடுதல் வரி இருக்கும்.

joined taxation பண்ணும் போது கூடுதல் வரிவிதிப்பு முறை ரூ.1.5 கோடி அதிகரிப்பதற்கு ICAI பரிந்துரை செய்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன் மனைவி இருவரின் ஆண்டு வருமானம் ரூ.1.50 கோடி முதல் ரூ.3 கோடி வரை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் வரி 10 சதவீதமும், ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை இருக்கும் பட்சத்தில் கூடுதல் வரி 15 சதவீதமும், ரூ.5 கோடிக்கும் மேல் வருமானம் தாண்டும் பட்சத்தில் கூடுதல் வரி 25 சதவீதமும் விதிக்கப்படலாம்.

இவைகளை தான் தற்போது ICAI பரிந்துரை செய்துள்ளது. அதனுடன் கூட்டு வரிவிதிப்பு ஏன் தேவை என்பதற்கான விளக்கத்தையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களில் இதேபோன்ற கூட்டு வரிவிதிப்பு மாதிரிகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என்று ICAI சுட்டிக்காட்டியது.

இந்தியா கூட்டு வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொண்டால் திருமணமான தம்பதிகள் சேர்ந்து வரிதாக்கல் செய்யும் அமெரிக்கா, ஜெர்மனி, நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இது தனி வருமான ஈட்டுபவரை நம்பியிருக்கக்கூடிய குடும்பங்களுக்கு கூட்டு வரிவிதிப்பு ஒட்டுமொத்த வரிபொறுப்பையும் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் joined taxation முறையில் பல சவால்களும் கண்முன் உள்ளது.

இப்போது உள்ள வரிதாக்கல் செய்யும் வசதி தனிநபர் வரி செலுத்த வடிவமைக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப முறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதில் நிறைய குழப்பங்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் கவனமாக இந்த வரிதாக்கல் முறையை வடிவமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

joined taxation முறையில் விலக்குகள் இருந்து அல்லது கணிசமாக அதிகரித்தாலும் அந்த தம்பதி வரி செலுத்த வேண்டிய அவசியம் கூட இல்லாமல் கூட போகலாம். இதனால் ஒருபுறம் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கு என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்ற joined taxation முறையில் நிறைய சாதகங்களும் இருக்கு, பாதகங்களும் இருக்கு.

இதையும் படியுங்கள்:
மத்திய பட்ஜெட் 2026: பெண்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் திட்டங்கள்..!!
joint taxation

2025 பட்ஜெட்டுக்கு முன்பே இந்த யோசனையை ICAI பரிந்துரை செய்திருந்தார்கள். ஆனால் அப்போது இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இப்பொழுதும் இந்த பரிந்துரையை தொடர்ந்து முன்மொழிந்துள்ளது ICAI. இந்த முறை மத்திய பட்ஜெட்டில் இது ஏற்றுக்கொள்ளப்படுமா, இல்லையா என்பது பட்ஜெட் தாக்கல் ஆகும் போது தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com