வந்தாச்சு ‘ஆதார் மாஸ்க் கார்டு’... இனி ஆதார் நம்பர் கொடுக்க தேவையில்லை...!!

முழு ஆதார் எண்ணை தேவையில்லாமல் பகிர்வதை தவிர்க்க UIDAI ஒரு பாதுகாப்பான மாற்றாக மாஸ்க்டு ஆதார் வசதியை வழங்குகிறது.
Masked Aadhaar|மாஸ்க்டு ஆதார்
Masked Aadhaar|மாஸ்க்டு ஆதார்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்தியாவில் ஆதார் அட்டை இன்று ஒரு அடையாள ஆவணத்தைத் தாண்டி, அன்றாட வாழ்க்கையின் அடிப்படை தேவையாக மாறியுள்ளது. சிம் கார்டு, வங்கி கணக்கு, கல்வி சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள், தொழில் தொடக்கம் என பல்வேறு சேவைகளுக்கு ஆதார் தவிர்க்க முடியாத ஆவணமாக உள்ளது.

ஆனால் இந்த பயன்பாட்டோடு சேர்ந்து பாதுகாப்பு தொடர்பான அபாயங்களும் அதிகரித்துள்ளன. மேலும் இவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் வலுத்துவருகிறது. இந்த சூழலில், முழு ஆதார் எண்ணை தேவையில்லாமல் பகிர்வதை தவிர்க்க UIDAI ஒரு பாதுகாப்பான மாற்றாக மாஸ்க்டு ஆதார் வசதியை வழங்குகிறது. உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த வசதியை வழங்குகிறது.

மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்பது தனியுரிமையை மேம்படுத்தவும், ஆதார் தகவல்களை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) அறிமுகப்படுத்தப்பட்ட அம்சமாகும். கிட்டத்தட்ட ஒரு முகமூடி போல இது செயல்படும் என்று சொல்லலாம்.

அதாவது, இதில் ஆதார் கார்டில் உள்ள அடிப்படை விவரங்கள் அனைத்தும் இதிலும் இருக்கும்; ஆனால் 12 இலக்க ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 இலக்கங்கள் மட்டும் வெளியில் தெரியும்படி secured-ஆக வழங்கப்படும் மின்னணு ஆதார் (e-Aadhaar) பதிப்பாகும். உதாரணமாக, உங்கள் ஆதார் எண் XXXX-XXXX-1234 என்ற வடிவில் இருக்கும்.

உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும், உங்கள் ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இது பயன்படுகிறது.

இதன் முக்கிய அம்சங்கள்:

* முழு ஆதார் எண்ணையும் வெளிப்படுத்தாமல், அடையாளம் காண மட்டும் இதைப் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்.

* இதில் உங்கள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் UIDAI-ன் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும் என்பதால், இது சாதாரண ஆதார் அட்டையைப் போலவே சட்டப்பூர்வமான ஆவணமாக ஏற்கப்படுகிறது.

* ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையம், ரெயில் நிலையம், கடைகள் அல்லது பிற இடங்களில் அடையாளச் சான்றுக்காக (ID Proof) ஆதார் நகல் தேவைப்படும்போது இதை வழங்கலாம். சில வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கும் இது ஏற்றதாக உள்ளது.

* UIDAI தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் இந்த PDF கோப்பு பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.

ஆதார்
ஆதார்

* உங்கள் ஆதார் எண்ணை யாரிடமாவது பகிர வேண்டும் என்றால், உங்கள் முழு ஆதார் எண்ணுக்கு பதிலாக மாஸ்க்டு ஆதாரை பகிரலாம்.

ஆதார் நகலைப் பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்யும் முறை :

உங்களின் மாஸ்க்டு ஆதாரை UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மிக எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:

* ஆதார் அமைப்பின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதள https://uidai.gov.in/ பக்கத்திற்கு சென்று அதில், ‘My aadhaar’ பிரிவின் கீழ், ‘Download aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.

* இப்போது அந்த பக்கத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID) உள்ளிடவும். உங்களின் முழுப் பெயர், பின் குறியீடு மற்றும் பாதுகாப்புக் குறியீடு போன்ற பிற தேவையான விவரங்களையும் பதிவிட்ட பிறகு ‘Choose your preference’ பிரிவில், ‘Masked Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
மேட்ரிமோனி மோசடிகளுக்கு செக்.! இனி Matrimony தளங்களில் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்: தமிழக அரசு அதிரடி
Masked Aadhaar|மாஸ்க்டு ஆதார்

* பிறகு உங்களது ரெஜிஸ்டர்ட் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் OTP-ஐ பெறுவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரை உள்ளிட்டு சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.

* கீழே உள்ள 'Verify & Download' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்களின் மாஸ்க்டு ஆதார் கார்டை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF கோப்பு கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும். உங்களின் பெயரின் முதல் 4 ஆங்கில எழுத்துக்கள் (Capital letters) மற்றும் நீங்கள் பிறந்த வருடம் (YYYY) ஆகியவற்றிணைத்து உள்ளிட்டால் கோப்பு திறக்கும். (உதாரணமாக, பெயர் KAVITHA, பிறந்த வருடம் 1990 எனில், பாஸ்வேர்ட்: KAVI1990).

இதையும் படியுங்கள்:
இனி ஒரு எழுத்துப் பிழையும் வரக்கூடாது: ஆதார் பெயர் திருத்த விதிகளில் அதிரடி மாற்றம்!
Masked Aadhaar|மாஸ்க்டு ஆதார்

டிஜிட்டல் இந்தியா காலத்தில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாக மாறியுள்ள நிலையில், மாஸ்க்டு ஆதார் ஒரு பாதுகாப்பான தீர்வாக பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com