"தவெக அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை; ஆனால் ஒரு நிபந்தனை உண்டு" - மு.வீரபாண்டியன்..!

ஒன்றிய அரசுடன் இணக்கம் காட்டினால் முடிவு மாறும்; ஜனநாயகத்துக்காகவே இந்த வெளி ஆதரவு.
Tvk vs Communist
Communist
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவு தான் முக்கிய காரணம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தவெக நிர்வாகிகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக எந்த நேரத்திலும் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை கம்யூனிஸ்ட் வாபஸ் பெற்று விடும் என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் அதிரடியாக தெரிவித்திருந்தார்.

இது தவெக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என இந்தியன் கம்யூனிஸ்ட் செயலாளர் மு.வீரபாண்டியன் இந்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! மளமளவென சரிந்த தங்கம் விலை! 2 நாட்களில் இவ்வளவு குறைவா?
Tvk vs Communist

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின் போது, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுக ஊழல் பற்றி பேசும்போது கம்யூனிஸ்டையும் இழுத்து விட்டார். திமுக செய்த ஊழல் கம்யூனிஸ்டுக்கு தெரியாதா என அமைச்சர் கேட்டது கம்யூனிஸ்ட் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தான் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் தவெக அரசுக்கான கம்யூனிஸ்டுகளின் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறப்படலாம் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இடைத்தேர்தலுக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்றபோது, அரசைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என இந்தியன் கம்யூனிஸ்ட் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடியில் பரபரப்பு..! த.வெ.க-வுக்கு அஜித் ஆதரவு என போஸ்டர்... கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்!
Tvk vs Communist

இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், “தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. தவெக-வுக்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு கட்சி எடுத்த முடிவு. மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக கட்சி எடுத்த முடிவு. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றால், அந்த முடிவை கட்சி தான் எடுக்க வேண்டும். செயலாளராக இருந்தாலும் எனக்கு அந்த அதிகாரம் கிடையாது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே எங்கள் ஆதரவு; கூட்டணயில் நாங்கள் இல்லை. ஆதரவை வாபஸ் பெறுவோம் என நிர்பந்திக்கும் கட்சி அல்ல கம்யூனிஸ்ட். நாங்ள் எப்போதும் ஏழையின் பக்கம்; உழைக்கும் மக்களின் பக்கம். கம்யூனிஸ்டுகள் லஞ்சம் வாங்க மாட்டோம். லஞ்சம் வாங்குவோரைக் கண்டு அமைதியாகவும் இருக்க மாட்டோம்.

மதச்சார்பின்மையைக் கடந்து ஒன்றிய அரசுடன் தவெக அரசு நகர்ந்தால், அதுகுறித்து கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும். தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. எங்கள் மீது குற்றம் சாட்டும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது தவறு. நேரம் இருந்தால் அவர் கம்யூனிஸ்டுகளின் வரலாறைப் படித்து பார்க்கட்டும். அப்போது புரியும் நாங்கள் யார் என்று” என வீரபாண்டியன் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com