

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் உரிமை கோரியுள்ளார். டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் அமெரிக்கக் கொடியுடன் கூடிய நிலவின் படத்தைப் பகிர்ந்து, “The Moon is ours” (நிலவு எங்களுடையது) என்று குறிப்பிட்டுள்ளார். நிலவின் பின்னணியில் அமெரிக்கக் கொடி இருப்பது போன்ற ஒரு படத்தை அவர் இந்த வாசகத்துடன் பகிர்ந்தார். அதில், "சந்திரன் எங்களுடையது" என்று எழுதப்பட்டிருந்ததுடன், அதன் அருகில் அமெரிக்கக் கொடியும் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய உரிமைக் கோரல்கள் 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாட்டிலைட் மற்றும் விண்வெளி ஒப்பந்தத்திற்கு (Outer Space Treaty) எதிரானது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலவு மற்றும் இதர வான்வெளிகள் மீது எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.
அமெரிக்கா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள 1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), நிலவு அல்லது விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளையும் எந்தவொரு நாடும் தனது சொந்தterritory-ஆக உரிமை கொண்டாட முடியாது.
இந்த நிலவுப் பதிவை வெளியிடுவதற்குச் சற்று முன்பாக, அமெரிக்க விண்வெளிப் படைக்கான (Space Force) புதிய கருப்பு நிற உடைகளின் AI படங்களையும், நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் பெயரை "நியூ அமெரிக்கா" என்று மாற்ற வேண்டும் என்பது போன்ற தொடர்ச்சியான பல விசித்திரமான பதிவுகளையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
நாசாவின் (NASA) ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது மற்றும் நிலவில் நிரந்தர தளம் அமைப்பது போன்ற அமெரிக்காவின் விண்வெளி இலக்குகளைக் குறிக்கும் அடையாளமாகவே அரசியல் வல்லுநர்கள் இதைப் பார்க்கிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றுவது அதன் மக்களுக்கு அதிக கௌரவத்தை அளிக்கும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
இந்த யோசனையை நியூ மெக்சிகோவின் ஆளுநர் மிஷெல் லுஜன் கிரிஷம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அவர், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் டிரம்பின் பெயர் மாற்ற முன்மொழிவுக்குப் பதிலளித்தார்.
மாநிலத்தின் பெயர் "விவாதத்திற்குரியது அல்ல" என்றும், அமெரிக்கா உருவாவதற்கு முன்பிருந்தே அதுவே அதன் அடையாளமாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்ந்து வரும் எரிபொருள் விலை போன்ற அவசரப் பிரச்சினைகளிலிருந்து அமெரிக்கர்களின் கவனத்தைத் திசை திருப்ப டிரம்ப் முயற்சிப்பதாகவும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.
புவியியல் பெயர்களை மாற்றுவது தொடர்பான டிரம்பின் கருத்துகள் இதுவே முதல் முறை அல்ல. மெக்சிகோ வளைகுடாவை “கல்ஃப் ஆஃப் அமெரிக்கா” என அழைக்கும் முயற்சியும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில் லேக் ஒன்டாரியோவின் பெயரை மாற்றுவது குறித்தும் அவர் பேசியிருந்தார்.
தொடர்ச்சியான பதிவுகளில், டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசம் என்று உரிமை கோரியதோடு, அதற்கு "டிரம்ப் ஜலசந்தி" என்று பெயர் வைக்கலாம் என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இருப்பினும், பின்னர் அவர் அந்த யோசனையில் தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், கேலி கிண்டல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல், தனது பதவி காலத்தில் இது போன்று மொத்தம் 8 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.