இனி VAO ஆபீசுக்கு அலைந்து திரிய தேவையில்லை..! மொபைலிலேயே அடங்கல் சான்றிதழ் பெறும் அதிரடி வசதி!

விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கல் சான்றிதழை 'நம்ம வயல்' செயலி மூலம் சுயமாகப் பெறும் புதிய வழிமுறை குறித்து முழு விவரங்களை அறியுங்கள்.
நம்ம வயல் செயலி
நம்ம வயல் செயலி AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பயிர் காப்பீடு, பயிர்க்கடன் உள்ளிட்டவற்றை பெற தேவைப்படும், 'அடங்கல்' சான்றிதழ்களை, விவசாயிகளே சுயமாக பெறும் வகையில், 'நம்ம வயல்' (Namma Vayal - Farmer Self Survey) செயலியில், புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் விவசாயிகள் இந்த நம்ம வயல் மொபைல் செயலி மூலம் தங்கள் நிலத்தின் பயிர் விவரங்களை நேரடியாக டிஜிட்டல் முறையில் பதிவு செய்து அடங்கல் விவரங்களைச் சரிபார்க்கலாம். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர் விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களை நம்பியிராமல், தாங்களே நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்ய இந்தச் செயலி உதவுகிறது. மேலும் விவசாயிகளுக்குத் தேவையான பயிர் சாகுபடி முறைகள், பூச்சி மேலாண்மை, வானிலை அறிக்கை மற்றும் சந்தை நிலவரம் போன்ற பல்வேறு முக்கியத் தகவல்களை இந்தச் செயலி வழங்குகிறது.

விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் வருடத்தின் மூன்று பயிர் பருவத்திலும் என்ன பயிர் செய்துள்ளீர்கள் என்பதை தாங்களாகவே ஆன்லைன் அடங்கல் பதிவேற்றம் செய்யும் வகையில் தமிழக அரசு புதிய மொபைல் செயலியை வடிவமைத்துள்ளது.

அதை பயன்படுத்தி தங்களது சொந்த நிலத்தில் உள்ள அனைத்து சப்-டிவிஷன்களிலும் தற்போது நிலையில் என்ன பயிர் உள்ளது என்பதை வருடத்தின் மூன்று பயிர் பருவத்திலும் ஆன்லைன் அடங்கல் பதிவேற்றம் செய்து இனிவரும் காலங்களில் ஆன்லைனில் தாங்களாகவே ஆன்லைன் அடங்கல் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

இதன்மூலம் அடங்கல் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரை அணுகவேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம். அதாவது ஒரு கிராமத்தில் உள்ள நிலங்கள் மற்றும் அவற்றில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கும் அரசு, வருவாய் துறை ஆவணமான, 'அடங்கல்' சான்றிதழை, அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறுவது வழக்கம்.

இந்த ஆவணத்தில், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், புல எண், உட்பிரிவு எண் மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பின் அளவு, நஞ்சை, புஞ்சை, தரிசு எனும் நில வகைப்பாடு, நிலத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் மற்றும் பருவம், நீர்ப்பாசன ஆதாரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.

வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், விவசாய கடன் பெற, இயற்கை சீற்றங்களால் பயிர் சேதமடையும் போது, காப்பீட்டுத் தொகை பெற, விளைவித்த நெல் அல்லது தானியங்களை, அரசின் நேரடி கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய, அடங்கல் சான்றிதழ் அவசியம்.

Farmer Ramesh
Farmer Ramesh

அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம், விவசாயி தன் நிலம் மற்றும் பயிர் விபரங்களை தெரிவித்து, அடங்கல் சான்றிதழ் பெறுவது வழக்கம். தற்போது, தமிழக வேளாண் துறை, விவசாயிகள் தங்களுக்கான அடங்கலை, தாங்களே பெறும் வகையில், 'நம்ம வயல்' செயலியில், வசதியை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், தன்னர்வலர்கள் உள்ளிட்டோர் காரீப் பருவ பயிர் கணக்கெடுக்கும் பணி 80 சதவீதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதால், ரபி பருவம் தொடங்க உள்ளதால் விவசாயிகள் தாங்களாகவே நிலங்களை ஆன்லைனில் பதிவேற்ற மொபைலில் பிளே ஸ்டோரில் இருந்து ‘நம்ம வயல்’ (Namma Vayal - Farmer Self Survey) மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் பயிர் கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம்.

இனிவரும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்ய, கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெறுவதற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு என பல்வேறு துறைகளிலும் அடங்கல் ஆவணம் தேவைப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆன்லைன் அடங்கல் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என்பதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைத்து விவசாயிகளும் தாமாகவே முன்வந்து இப்பணியை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குவியும் பாராட்டுக்கள்..! சர்வதேச அரங்கில் உரையாற்ற போகும் இந்திய விவசாயி..!
நம்ம வயல் செயலி

விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் (விவசாயி அடையாள அட்டை) பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் மட்டுமே ஓடிபி (OTP) வரப்பெற்று லாகின் செய்ய முடியும் என்பதால் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி லாகின் செய்யலாம்.

முக்கிய அம்சங்கள்:

விவசாயிகள் தங்கள் ஆதார் எண் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் செயலியில் உள்நுழையலாம்.

ஒவ்வொரு சாகுபடி பருவத்திற்கும் (மூன்று பருவங்கள்) தங்களது பயிர் விவரங்களை தாங்களே பதிவிடலாம்.

வயலில் இருந்தபடியே பயிரின் புகைப்படத்தையும், தானியங்கி ஜிபிஎஸ் (GPS) இருப்பிடத்தையும் பதிவு செய்யலாம்.

விவசாயியின் பெயரில் உள்ள நிலப் பகுதிகள் மற்றும் உட்பிரிவுகளை (Sub Division) பார்த்து சரிபார்க்கலாம்.

அடங்கலுக்காக கிராம நிர்வாக அலுவலரை (VAO) நேரில் தேடி அலையாமல் சுயமாகத் தகவல்களைப் பதிவு செய்து கொள்ள இது உதவுகிறது.

இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் தரவுகளைப் பதிவு செய்து, இணைப்பு கிடைக்கும்போது ஒத்திசைவு (Sync) செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த 1 கார்டு போதும்..! விவசாய கடன், மானியம், பயிர்க் காப்பீடு... அனைத்துக்கும் ஒரே தீர்வு..!
நம்ம வயல் செயலி

செயலியைப் பதிவிறக்க:

ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 'Namma Vayal' (நம்ம வயல்) என்று தேடி, இந்த செயலியை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.