

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்குஅர்ஜுனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு துறையில் வழங்கப்படும மிக உயர்ந்த மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்படி 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மூலமோ மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
இதில் இருந்து விருதுக்குரியவர்களை, அதாவது நடப்பாண்டுக்கான விளையாட்டு விருதுகளை ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிரலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுகளுக்கான பெயர்களை மத்திய இளைஞர் விவாகரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் பட்டியலில், செஸ் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக், இந்திய தடகள வீரரான தேஜஸ்வின் சங்கர் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேஜர் தியான் சந்த் கேள் ரத்னா விருதுக்கு மத்திய அரசு யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர், ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரையின்படி விருது 1962 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர் அருமைநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் குத்துச்சண்டை பயிற்சியாளர் தர்மேந்திர சிங் யாதவ் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர் வீரேந்தர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது அறிவிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் :
தேஜஸ்வின் ஷங்கர் - தடகளம்
முகமது அஜ்மல் - தடகளம்
பிரியங்கா கோஸ்வாமி - தடகளம்
ட்ரீசா ஜாலி - பாட்மிட்டன்
காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன்
நரேந்தர் - குத்துச்சண்டை
விதித் குஜராத்தி - செஸ்
திவ்யா தேஷ்முக் - செஸ்
தனுஷ் ஸ்ரீகாந்த் - காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்
லால்ரெம்சியாமி - ஹாக்கி
ராஜ்குமார் பால் - ஹாக்கி
சுர்ஜித் - கபடி
பூஜா - கபடி
ருத்ரன்ஷ் கண்டேல்வால் - மாற்றுத்திறனாளி துப்பாக்கி சுடுதல்
ஏக்தா பயான் - பாரா தடகளம்
அரவிந்த் சிங் - ரோயிங்
அகில் ஷியோரன் - துப்பாக்கி சுடுதல்
துரோணாச்சார்யார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் :
பர்வீர் சிங் - தடகளம்
சோட்டே லால் யாதவ் - குத்துச்சண்டை
நேஹா நந்த்குமார் சவான் - துப்பாக்கி சுடுதல்
தர்மேந்திர சிங் யாதவ் -குத்துச்சண்டை (வாழ்நாள் சாதனை)
விரேந்தர் குமார் - மல்யுத்தம் (வாழ்நாள் சாதனை)