இனி ஸ்கூலுக்கு கெத்தா போலாம்! அதிரடியாக களமிறங்கும் நவீன ஹீரோ சைக்கிள்கள்!

மாணவர்களுக்கு ரூ.7,235; மாணவிகளுக்கு ரூ.7,476 - நவீன வசதிகளோடு வெளியாகும் முழு கொள்முதல் பட்டியல்
நவீன சைக்கிள்
Free Cycle
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் திட்டம் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக பதவி ஏற்றிருக்கும் தவெக அரசு, மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளின் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தது. இதன்படி முன்பு வழங்கப்பட்ட சைக்கிள்கள் மாதிரி இல்லாமல், நவீன சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டது.

நவீன சைக்கிளில் குடிநீர் பாட்டிலை வைக்கும் வசதியும் உள்ளது. அதோடு மாணவர்கள் சைக்கிள் ஓட்டும் போது பாதுகாப்பாக பயணிக்க ஹெல்மெட்டும் வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டது.

நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்த விலை L1 ஒப்பந்தப் புள்ளிதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹீரோ நிறுவனம் தயாரிக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான சைக்கிள்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட, கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்ட நவீன சைக்கிள்களை வழங்குவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, நவீன சைக்கிள் திட்டத்தின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

ஒரு சைக்கிளின் விலை எவ்வளவு?

ஹீரோ நிறுவனம் அளித்த டெண்டரின் படி, மாணவர்களுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூபாய் ரூ.7,235-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூபாய் ரூ.7,476-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மொத்த செலவு:

அரசு பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்பட இருப்பதால், மொத்தம் 5,32,388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கு ரூ.392 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்ஜெட் தாக்கலின் போது 277 கோடி ரூபாயை நவீன சைக்கிள் திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது கூடுதலாக ரூ.115 கோடி தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நவீன சைக்கிள்
Free Cycle
இதையும் படியுங்கள்:
றெக்கை கட்டிப் பறந்த தங்கம்... சத்தமில்லாமல் சறுக்கிய வெள்ளி! இன்றைய விலையில் அதிரடி மாற்றம்!
நவீன சைக்கிள்

பொதுவாக இதற்கு முன்னர் தமிழகத்தில் பயிலும் அரசு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் தரம் குறைவாகவே இருக்கும். சைக்கிள்களை சர்வீஸ் செய்து தான் இயக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான மாணவர்கள் சைக்கிளை உடனே விற்று விடுவார்கள். ஆனால் தற்போது நவீன சைக்கிள்கள் வழங்கப்பட இருப்பதால் இந்த சைக்கிளை மாணவர்கள் விற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு நவீன சைக்கிள் எனச் சொல்லியுள்ள நிலையில், சைக்கிளின் தரம் எப்படி இருக்கும், எந்த நிறத்தில் சைக்கிள் தயாரிக்கப்படும், கூடுதல் வசதிகள் என்னென்ன போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

டெண்டரை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதால், நவீன சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக பழுப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்பட்டஸபேருந்துகளுக்கு தவெக-வின் கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் பயன்படுத்தப்பட்டன. ஆகையால், சைக்கிளுக்கும் அதே நிறத்தைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிடலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2 கேஸ் இணைப்பு இருந்தால் இலவச சிலிண்டர் கிடைக்குமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!
நவீன சைக்கிள்
logo
Kalki Online
kalkionline.com