டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போறீங்களா? - அமலுக்கு வந்துள்ள அதிரடி மாற்றங்கள்!

வாகன ஓட்டிகளுக்கான டிரைவிங் லைசென்ஸ் பெறும் நடைமுறையில் மத்திய அரசு இப்போது புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
Driving license
Driving license
Published on

வாகன ஓட்டுநர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் டிரைவிங் லைசென்ஸ்(Driving License). இதை பெறுவதற்காக முன்பு மக்கள் RTO அலுவலகத்திற்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களால்டிரைவிங் லைசென்ஸ் பெறும் நடைமுறை மிகவும் எளிமையாகியுள்ளது. பதைத் தவிர்ப்பதற்காகவும் மாற்றப்பட்டுள்ளது.

இனி இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவது வேகமாகவும், சில சந்தர்ப்பங்களில் RTO அலுவலகத்திற்கு செல்லாமல் கூட தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மூலமாக உரிமம் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் RTO-வில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமுமில்லை. நேரமும் அலைச்சலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு டிரைவிங் லைசென்ஸ் பெற அனைவரும் RTO அலுவலகத்திற்கு நேரில் சென்று தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்களின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் அங்கேயே ஓட்டுநர் தேர்வு(Driving Test) எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சி மையம் வழங்கும் சான்றிதழை பயன்படுத்தி டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
புதிய டிரைவிங் லைசென்ஸ் வந்தாச்சு..!
Driving license

டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லையில் விண்ணப்பிப்பது எப்படி?

அதிகாரப்பூர்வ தளம்: Sarathi Parivahan Portal

இப்போது டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்கும் செயல்முறை பெரும்பாலும் ஆன்லைன் முறையின் மூலமே நடைபெறுகிறது. இந்த https://parivahan.gov.in இணையதள முகவரிக்கு சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்ப படிவத்தில் பெயர், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை அதில் பதிவேற்ற வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை

முகவரி சான்று

பிறந்த தேதி சான்று

புகைப்படம்

கையொப்பம்

டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் இந்த ஆவணங்களை ஆன்லைனில் Upload செய்ய வேண்டும். அதன் பிறகு விண்ணப்ப கட்டணத்தை Online payment மூலம் செலுத்தலாம். சிலருக்கு ஆன்லைன் தேர்வு அல்லது பயிற்சி நேரத்தைத் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.. விண்ணப்பித்த பிறகு அதன் நிலையை Portal-ல் நேரடியாக சரிபார்க்கலாம்.

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் இனிமேல் கவலைப்பட தேவையில்லை. பின்வரும் முறையில் Duplicate Licenseஐ எளியமுறையில் பெறமுடியும்.

* முதலில் உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று Lost Property Report பதிவு செய்ய வேண்டும்.

* அதன் பிறகு Sarathi Parivahan Portal-ல் டூப்ளிகேட் லைசன்ஸ் (Duplicate License) பெற விண்ணப்பிக்க வேண்டும்.

* பழைய License Number மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

* விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Duplicate License கேட்டு விண்ணப்பித்த சில நாட்களில் புதிய டிரைவிங் லைசென்ஸ் தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும்.

அதேசமயம் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், ரூ.25,000 அபராதம் மற்றும் வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படலாம். மேலும் அத்தகைய சிறுவர்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

இதையும் படியுங்கள்:
வாகன ஓட்டிகள் உஷார்..! அமலுக்கு வரும் 'பெனால்டி பாயிண்ட்ஸ்' முறை: 12 புள்ளிகள் சேர்ந்தால் லைசென்ஸ் ரத்து..!!
Driving license

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மாற்றங்கள் மூலம் டிரைவிங் லைசென்ஸ் பெறும் நடைமுறை மெல்ல மெல்ல டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் புரோக்கர்களிடம் அதிக பணம் கொடுத்து ஏமாறாமல் நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தங்கள் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com