புதிய தொழிலாளர் சட்டம் அமல்: 4 நாட்கள் வேலை, இரட்டிப்பு ஊதியம், ஓராண்டில் கிராஜூவிட்டி; டெலிவரி ஊழியர்களுக்கும் PF..!

labour law
labour lawimage credit-ksandk.com
Published on

மத்திய அரசு புதிதாக 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஊதியச்சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிடப் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. மாறி வரும் பணிச்சூழல்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பலன்களை நீட்டிப்பதோடு, ஒப்பந்த கால ஊழியர்களுக்கான (Fixed-Term Employees) பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைத்து மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது.

தொழிலாளர் நலனை மேம்படுத்துதல், பழமையான விதிகளை புதுப்பித்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து ஏற்கனவே அமலில் உள்ள 29 பழைய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாற்றாக 4 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது அமலில் உள்ள காலத்துககு பொருந்தாத சட்டங்களுக்கு பதில் நவீன நிலைமைக்கு ஏற்ப சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்துவது, எதிர்காலத்துக்கு ஏற்ப தொழிலாளர்களை உருவாக்குவது, தொழில்கள் நீடித்து இயங்குவதை உறுதி செய்வதும் புதிய தொழிலாளர் சட்டங்களின் நோக்கம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மார்ச் 4: தேசியத் தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள் - தொழிலாளர் நலன், தேசத்தின் பலம்!
labour law

1930, 1950 ஆண்டுகளில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இல்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் துண்டு துண்டாக உள்ளதாகவும், மிகவும் சிக்கலான பொருத்தமற்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

வளர்ந்த பல நாடுகள் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களை செய்துவிட்ட பிறகும், இந்தியாவில் பழமையான சட்டங்களே தொடர்ந்தன. தொழிலதிபர் கடைபிடிக்க வேண்டிய விதிகளும் புதிய சட்டங்களில் எளிமையப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. போட்டித்திறனை ஊக்குவித்து, சுயசார்பு பொருளாதாரத்தை உருவாக்க புதிய தொழிலாளர் சட்டங்கள் உதவும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. வேலையில் சேரும் போதே தொழிலாளர்களின் பணிக்காலத்தை தொழிலதிபர்கள் நிர்ணயித்து நியமனம் செய்ய சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தளங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கானோருக்குச் சட்டத் தெளிவைக் கொடுக்கும் வகையில், தற்காலிக பணி அல்லது ஃப்ரீலேன்சிங் (Gig Work), தளப் பணி (Platform Work) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் (Aggregators) ஆகியவை முறையாக வரையறுக்கப்பட்டுள்ளன.

புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள சலுகைகள் :

* புதிய தொழிலாளர் சட்டங்களின்படி, ஒப்பந்த கால ஊழியர்கள், நிரந்தர ஊழியர்களுக்கு இணையான பெரும்பாலான பலன்களைப் பெற உரிமை உண்டு. இதில், வேலை நேரம், ஊதியம் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அடங்கும்.

* புதிய சட்டத்தில் ஊழியர்களின் gratuity குறித்தான முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. gratuity என்னும் பணிக்கொடை என்பது தொழிலாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக நிறுவனத்தின் முதலாளிகள் வழங்கும் ஒரு மொத்தத்தொகை பணப்பலனாகும். இதை 5 வருடங்களுக்கு பதிலாக ஓராண்டு பணிபுரிந்தாலே கிராஜூவிட்டி எனப்படும் பணிக்கொடை பெற தொழிலாளர்களுக்கு உரிமை வழங்க புதிய சட்டவிதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்வதுடன் ஒப்பந்த பணியாளர்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க சட்டவிதி.

* தொழிலாளர்கள் இடையே ஆண்-பெண் பாகுபாடு காட்டப்படுவதை புதிய சட்டம் தடை செய்கிறது.

* வேலைவாய்ப்பு, ஊதியம், மற்றும் வேலை நிலைமைகளில் ஆண்-பெண், திருநங்கைகள் உட்பட பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதையும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

* அனைத்து தொழில்களிலும் இரவு ஷிப்டுகளில் பெண்களை பணியில் அமர்த்தலாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை நிறுவனம் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு பெண் ஊழியர்களின் சம்மதம் வேண்டும்.

* அனைத்து வகையான பணியாளர்களுக்கும் பணி நியமான ஆணையை கட்டாயம் வழங்க வேண்டும்.

* நிலத்தடி சுரங்கங்களில் பணிபுரியத் தயாராக இருக்கும் பெண்களை இப்பணியில் ஈடுபடுத்துவதற்கு சட்டப்படி அனுமதி.

* பீடி தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை புதிய சட்டம் நிர்ணயித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி ஊழியர்கள் ஓராண்டு வேலை பார்த்தாலே பணிக்கொடை (Gratuity) கிடைக்கும்..!
labour law

* தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என, வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்த சட்டம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றும் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்றும் மாற்றிக்கொள்ள வழி வகுக்கிறது. இதன் மூலம் கூடுதலாக வேலை பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்பு சம்பளம் வழங்க சட்டம் வலியுறுத்துகிறது.

* பணி நேரத்தை தாண்டி வேலை செய்யும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் வழிவகை செய்திருக்கிறது.

* 40 வயதை கடந்த அனைத்து பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் கட்டாய இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* தொழிற்சங்க அங்கீகாரத்தை பொறுத்த அளவில், 51% உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களாக அங்கீகரிக்கப்படும்.

* மாதந்திர ஊதியத்தை 7-ம்தேதிக்குள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் நிறுவனத்தில் கேண்டீன், குடிநீர், சுகாதாரமான கழிவறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் காப்பீடு மற்றும் பென்ஷனை உறுதி செய்ய வேண்டும்.

* முன்பு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அப்பாயின்மென்ட் லெட்டர் கிடைக்கும். தற்போது வந்துள்ள புதிய சட்டத்தின் படி எந்த வேலையாக இருந்தாலும் அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுக்க வேண்டியது அவசியம்.

* அனைத்து தொழிலாளர்களுக்கான பிரத்யேக UAN எண் வழங்கப்பட வேண்டும்.

* வீடு மற்றும் பணியிடத்திற்கு இடையிலான பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்கள், இனி வேலை தொடர்பான விபத்துக்களாகவே கருதப்பட்டு இழப்பீடு அல்லது காப்பீடு சலுகை வழங்கப்படும்.

* ESIC கவரேஜ் 740 மாவட்டங்களுக்கு அதிகரிக்கப்படும்.

* பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்வு.

* கடந்த 2017-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.24,000 ஆக திருத்தி அமைக்கப்பட்டது. இதனை அனைத்து தொழிலாளர்களுக்கு உறுதிபடுத்தும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

* நிரந்தர பணியாளர்களை போன்று ஒப்பந்த ஊழியர்களுக்கும் விடுமுறை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* ஸ்விகி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் டெலிவரி ஊழியர்களுக்கும் PF, மருத்துவ காப்பீடு போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தொழிலாளர் தினம் - 'ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு சமம்' - சொன்னது யார்? 'உழைப்பு' பற்றி அறிஞர்களின் பொன்மொழிகள்!
labour law

இந்த மாற்றங்கள், இந்தியத் தொழிலாளர் சந்தையில் நீண்ட காலமாக இருந்து வந்த பல சவால்களைச் சரிசெய்து, அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிசெய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com