

மத்திய அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான தேசிய காப்பீடு நிறுவனத்தில் (NICL - National Insurance Company Limited) காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் தேசிய காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆர்வமுள்ள பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 7-ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர அரசு வேலை வாய்ப்பு
நிறுவனம் : National Insurance Company Limited (NICL)
பணியிடம்: உதவியாளர் (Assistant - Class III)
மொத்த காலிப்பணியிடங்கள்: 500 (தமிழகத்தில் 49 இடங்கள்)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. அதன்படி SC / ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (General / EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC / ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள் வரை தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி வகை : நிரந்தர பணி
விண்ணப்ப முறை : ஆன்லைனில் மட்டும் (nationalinsurance.nic.co.in)
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07 ஆகஸ்ட் 2026
விண்ணப்ப கட்டணம்: ST/SC/Ex-s/PWD – 100 ரூபாயும், மற்றவர்களுக்கு (Others) – 850 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
முதற்கட்டத் தேர்வு (Prelims): 27 ஆகஸ்ட் 2026
முதன்மைத் தேர்வு (Mains): 30 அக்டோபர் 2026
தேர்வு முறை : முதல் நிலைத் தேர்வு + இரண்டாம் நிலை தேர்வு (Phase-I & II) + பிராந்திய மொழித் தேர்வு + நேர்முகத் தேர்வு (Personal Interview)
ஆரம்ப அடிப்படைச் சம்பளம் : ரூ.36,290 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
மாத சம்பளம் : சுமார் ரூ.63,000 (படிகளுடன்)
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக ஆகஸ்ட் 7-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் NICL Careers என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
உள்ளே சென்று “RECRUITMENT OF 500 ASSISTANT (CLASS-III) 2026-27” என்ற அறிவிப்பை திறக்கவும்.
அதில் Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
New Registration மூலம் பதிவு செய்து Registration Number & Password பெறவும்.
இதில் தெரியும் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
அடுத்து விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
கடைசியாக அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதான என்பதை ஒருமுறை சரிபார்த்த பின்னர் Submit செய்யவும்.
இறுதியாக விண்ணப்பத்தின் PDF/Print Copy-யை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்க மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண National Insurance Recruitment பக்கத்தைப் பார்வையிடவும்.
முக்கிய குறிப்பு: தேசிய காப்பீடு நிறுவனத்தில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.