மிஸ் பண்ணிடாதீங்க..! நாளை வானில் தோன்றும் பிரமாண்ட'Beaver Supermoon'!

நாளை தோன்றும் பீவர் சூப்பர்மூன் வழக்கமான முழு நிலவை விட எவ்வளவு பெரிதாகவும் பிரகாசமாகவும் இருக்கும்? முழு விவரம் இதோ.
Beaver Supermoon|பீவர் சூப்பர்மூன்
Beaver Supermoon|பீவர் சூப்பர்மூன்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்திய வானில் நவம்பர் 24-ம்தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை 'பீவர் சூப்பர்மூன்' (Beaver Supermoon) தோன்றும். இந்திய நேரப்படி நவம்பர் 24 இரவு 8:23 மணிக்கு இந்த முழு நிலவு உச்சநிலையை அடையும் என்று நாசா கூறியுள்ளது.

இரவு நேரத்தில் நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, அந்த நிலவின் அழகு நம்மை சில நிமிடங்கள் அப்படியே ரசிக்க வைக்கும். அப்படி, சில நேரங்களில் வெண்மையாகவும், சில நேரங்களில் பொன்னிறமாகவும் வானில் வலம் வரும் நிலவு, தினமும் நம் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டே இருக்கிறது.

பொதுவாக நவம்பர் மாதத்தின் பௌர்ணமி நிலவு பாரம்பரியமாக 'பீவர் மூன்' (Beaver Moon) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால், நாளை (நவம்பர் 24-ம்தேதி) வழக்கத்தைவிட இன்னும் கொஞ்சம் பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கப் போகிறது.

நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது, பூமிக்கு மிக அருகில் (Perigee) வரும் நாளில் முழு நிலவு (பௌர்ணமி) தோன்றினால் அது 'சூப்பர் மூன்' என அழைக்கப்படுகிறது.

நாளை வானில் தோன்றும் பிரம்மாண்ட 'சூப்பர்மூன்' பூமிக்கு அருகில் வரும்போது முழு நிலவாகத் தோன்றுவதால், வழக்கமான முழு நிலவை விட சுமார் 14% பெரியதாகவும், 30% அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என நாசா (NASA) தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவம்பர் 24-ம் தேதி இரவு 8:23 மணிக்கு இந்த முழு நிலவு உச்சநிலையை அடையும்.

குளிர்காலத்திற்கு முன்பு நீர்நாய்கள் (Beavers) சுறுசுறுப்பாகச் செயல்படும் காலத்தில் வருவதால், நவம்பர் முழு நிலவு 'பீவர் சூப்பர்மூன்' (Beaver Supermoon) என அழைக்கப்படுகிறது.

நிலவு
நிலவுAI Image

நாளை மாலை சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு அடிவானத்தில் நிலவு உதிக்கும்போது இதைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும்.

மேகமூட்டம் இல்லாத திறந்தவெளியில் இருந்து வெறும் கண்ணால் எளிதாகக் காணலாம். இதைக் காணத் தொலைநோக்கி (Telescope)போன்ற சிறப்புக் கருவிகள் எதுவும் தேவையில்லை. புகைப்படம் எடுக்க ட்ரைபாட் (tripod) மற்றும் குறைந்த வெளிச்ச அமைப்பு (lower exposure) உதவும்.

நிலவு பூமியைச் சுற்றி வரும் 27 நாள் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் வரும் நிலையை 90 சதவீதத்திற்கும் நெருக்கமாக அடையும்போது இந்த முழு நிலவாக தோன்றும்போது, அது 'சூப்பர்மூன்' என அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவை விட இது 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆர்டெமிஸ் நிலவு பயணம்… அதில் நமக்கென்ன பயன்?
Beaver Supermoon|பீவர் சூப்பர்மூன்

இது 2026-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் தொடர்ச்சியான மூன்று சூப்பர் மூன்களில் முதலாவதாகும். இதைத் தொடர்ந்து 2026 டிசம்பர் 23 அல்லது 24-ம்தேதிகளில் கோல்ட் மூன் (Cold Moon) மற்றும் 2027 ஜனவரி 22-ம்தேதி ஓநாய் மூன் (Wolf Moon) தோன்றவுள்ளன.

டிசம்பர் 24-ம்தேதி தோன்றும் 'கோல்ட் மூன்' 2026-ஆம் ஆண்டிலேயே பூமிக்கு மிக அருகில் வரும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான சூப்பர் மூனாக இருக்கும். (மேற்கத்திய நாடுகளின் நேரப்படி இது டிசம்பர் 23 இரவு நிகழ்வதால், சர்வதேச அளவில் டிசம்பர் 23 அல்லது 24 எனக் குறிப்பிடப்படுகிறது).

சில வானியல் கணக்கீடுகளின்படி, 2027 பிப்ரவரி 20-ஆம் தேதி தோன்றும் 'ஸ்னோ மூன்' (Snow Moon) நிலவும் சூப்பர் மூன் வரம்பிற்குள் வருவதால், இது தொடர்ச்சியான நான்கு சூப்பர் மூன்களின் வரிசையாகவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நிலவு முதல் செவ்வாய் வரை... விண்வெளி ஆய்வில் இந்தியாவின் விஸ்வரூபம்!
Beaver Supermoon|பீவர் சூப்பர்மூன்

அதனால், உலகெங்கிலும் உள்ள மக்கள் மறக்காமல் நாளை (நவம்பர் 24-ம்தேதி) மாலை நிலவு உதிக்கும் நேரத்தில் இரவு வானத்தை ஒருமுறை அண்ணாந்து பார்த்து இந்த அபூர்வ நிலவைக் கண்டு ரசிக்கலாம்... வழக்கமான நிலவு அல்ல, பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட நிலவு உங்களுக்காக காத்திருக்கிறது.