

தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கான புதிய ஊக்கத்தொகை (Incentive) திட்டத்தின் கீழ், புதிய QR குறியீடு மற்றும் ஒலிப்பெட்டி (Soundbox) பதிவுகளுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), சிறு வணிகர்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக 'யுபிஐ வியாபார் சக்ஷம் திட்டம்' (UPI Vyapaar Saksham Scheme) என்ற புதிய ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026 நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் புதிய QR குறியீடுகளுக்கு ரூ.300 மற்றும் ஒலிப்பெட்டிகளுக்கு (Soundbox) ரூ.750 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
ஊக்கத்தொகை மற்றும் நிதி ஒதுக்கீடு விவரங்கள்:
* இந்தத் திட்டத்திற்கான நிதி, வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை நிறுவனங்கள் (PSPs) ஈட்டும் வணிகர் தள்ளுபடி விகித (MDR) வருவாயிலிருந்து 5% பங்களிப்பின் மூலம் திரட்டப்படுகிறது.
* இந்த ஊக்கத்தொகை அமைப்பு, புதிய வணிகர்களைச் சேர்ப்பது (30%), பரிவர்த்தனைகளை அதிகரிப்பது (50%), மற்றும் படிப்படியான வளர்ச்சி (20%) ஆகிய மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டது.
* புதிய வணிகர்கள் இணைப்பின் கீழ், ஒரு புதிய QR குறியீட்டிற்கு ரூ. 300 மற்றும் ஒரு ஒலிப்பெட்டிக்கு ரூ. 750 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதாவது, தகுதியான புதிய சிறு வணிகர்களிடம் நிறுவப்படும் ஒவ்வொரு QR குறியீட்டிற்கும் ரூ.300 மற்றும் ஒலிப்பெட்டிக்கு ரூ.750 வழங்கப்படும். வணிகர், ஒரு காலாண்டின் குறைந்தது இரண்டு மாதங்களில், மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 மொத்த மதிப்புள்ள, தகுதியான குறைந்தது 25 UPI பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஊக்கத்தொகை நேரடியாக வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல், அந்தச் சாதனங்களை நிறுவும் வங்கிகளுக்கு (Acquiring Banks) வழங்கப்படும்.
* வங்கிகள், தகுதியான பரிவர்த்தனை அளவுகளில் ஒவ்வொரு காலாண்டுக்கும் குறைந்தபட்சம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 5% பரிவர்த்தனை வளர்ச்சியைக் காட்டும் வங்கிகளுக்கு, மொத்தத் தகுதியான பரிவர்த்தனை மதிப்பில் 0.03% ஊக்கத்தொகையாகக் கிடைக்கும்.
* இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய காலாண்டை விட அதிகரிக்கப்பட்ட பரிவர்த்தனை மதிப்பில் கூடுதலாக 0.20% ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தகுதி மற்றும் முக்கிய நிபந்தனைகள்:
* முந்தைய நிதியாண்டில் மொத்த விற்பனை அல்லது வருமானம் (Annual Turnover) ரூ.40 லட்சம் வரை உள்ள சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறுவார்கள்.
* அடுக்கு 3 முதல் அடுக்கு 6 வரையிலான நகரங்கள் (Tier 3 to Tier 6), வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பிற நகரங்களில் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi) மற்றும் பிஎம் விஸ்வகர்மா போன்ற மத்திய அரசுத் திட்டங்களில் இணைந்துள்ள சிறு வணிகர்களும் பயன்பெறலாம்.
* ஒரு காலாண்டில் ஏதேனும் இரண்டு மாதங்களில், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.5,000 மதிப்பிலான 25 வெற்றிகரமான பரிவர்த்தனைகளை வணிகர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.2,000 அல்லது அதற்குக் குறைவான மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மட்டுமே தகுதியானவையாகக் கருதப்படும்.
* யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டண முறை நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
NPCI, ஆண்டுதோறும் 60 லட்சம் முதல் ஒரு கோடி QR குறியீடுகளையும், ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ஒலிப்பெட்டிகளையும் நிறுவுவதையும், ஏற்கனவே உள்ள சிறு வணிகர்களிடையே 30 முதல் 50 சதவிகித பரிவர்த்தனை வளர்ச்சியை ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. ஊக்கத்தொகைகள் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு, கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.