யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்..! இனி UPI ஆப் ஓபன் பண்ணாமலே பணம் செலுத்தலாம்..!

இனிமேல் Google Pay, phonepe, Paytm போன்ற ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து பணம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
UPI Tap and Pay
UPI Tap and PayAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இன்றைய உலகில் மொபைல் மட்டும் இருந்தால், போதும். உலகத்தில் உள்ள அனைத்தையும் நிமிடத்தில் பெற்றுவிடலாம். அதிலும் குறிப்பாக, ஒருகாலத்தில் பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய நிலையில், இன்று, அந்தப் பணத்தைக்கூட மொபைல் மூலம் செலுத்தும் வசதி வந்துவிட்டதால், பயனர்கள் பலரும் யுபிஐ எனப் பணப் பரிவர்த்தனையையே மேற்கொள்கின்றனர்.

இனிமேல் NFC (Near Field Communication) தொழில்நுட்பம் மூலம் UPI ஆப்பை மேனுவலாகத் திறந்து, க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்யாமலேயே மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.

தற்போதுள்ள இந்த வசதி UPI ‘டேப் அண்ட் பே’ (UPI Tap and Pay) என்று அழைக்கப்படுகிறது. UPI டேப் அண்ட் பே என்பது க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்யாமலேயே, ஸ்மார்ட்போனைத் தொடுவதன் மூலம் உடனடியாகப் பணம் செலுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் NPCI இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன் மூலம் உங்களது டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது ஸ்மார்ட்போனை, பணம் செலுத்தும் இயந்திரத்தின் (POS Machine) அருகில் காட்டி அல்லது லேசாகத் தொட்டு, ரகசியக் குறியீடு (PIN) ஏதுமின்றி மிக வேகமாகப் பணம் செலுத்த முடியும்.

தற்போது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து, கியூ-ஆர் குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்து, PIN எண்ணை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டேப் அண்ட் பே' (UPI Tap & Pay) வசதி மூலம், ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், எந்தவொரு UPI செயலியை திறக்காமலேயும் மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.

யுபிஐ டேப் அண்ட் பே நடைமுறைப்படுத்துவது எப்படி?

இதற்கு உங்களுடைய போன் NFC-Enabled Android phone ஆக இருந்தால் மட்டும் போதும். அப்படி உங்கள் போன் இருந்தால் Settings சென்று Bluetooth and connection என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்று, NFC-ஐ Enable செய்ய வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் எந்த UPI ஆப் பயன்படுத்துகிறீர்களோ (gpay, phonepe, Paytm) எதுவாக இருந்தாலும், இதை ஓபன் செய்து உங்களுடைய Profile-ஐ கிளிக் செய்தால் ‘other ways to pay’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் ‘Add Credit Or Debit Cards’ என்பதில் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும். அவ்வளவு தான் இதை செய்து வைத்து விட்டால் போதுமானது. இதன் பிறகு நீங்க ஏதாவது ஷாப்பிப் அல்லது பெட்ரோல் நிலையத்தில் பேமெண்ட் (Payment) செய்ய வேண்டும் என்றால், எந்த ஒரு UPI ஆப்பையும் ஓபன் செய்ய வேண்டாம்.

உங்களுடை போனை அந்த POS மெஷினில் (POS Machine) வைத்தால் போதும் பணம் செலுத்த முடியும். ஆனால் அந்த POS மெஷினிலும் NFC-enabled இருக்க வேண்டியது முக்கியம். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பணப்பரிவர்த்தனை சாத்தியமாகும்.

யுபிஐ டேப் அண்ட் பே
யுபிஐ டேப் அண்ட் பேAI image

இதுபோன்று பேமெண்ட் செய்வதற்கு பின் நம்பர் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட அளவு வரை மட்டும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

பணம் செலுத்துபவரின் மொபைலில் மொபைல் டேட்டா அல்லது வைஃபை (Wi-Fi) ஆன் (Offline Payment) செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடையில் உள்ள POS மெஷினின் இன்டர்நெட் மூலமாகவே இந்த பரிவர்த்தனை நடந்துவிடும்.

உங்கள் மொபைலை அன்லாக் செய்து, கடையில் இருக்கும் மெஷினில் தட்டினால் (Tap) போதும். ரூ.5,000 வரையிலான கட்டணங்களுக்கு UPI PIN உள்ளிடத் தேவையில்லை. இந்தியாவில் பொதுவாக ரூ.5,000 வரையிலான தொகையை பின் நம்பர் (PIN) இல்லாமலேயே அனுமதிக்கப்படுகிறது. ரூ.5,000-க்கு மேல் பணம் செலுத்தும்போது மட்டுமே PIN கேட்கும் (வங்கியைப் பொறுத்து இது மாறலாம்).

கேமராவைத் திறந்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யும் நேரம் மிச்சமாவதால், சூப்பர் மார்க்கெட், மெட்ரோ, பெட்ரோல் பங்க் போன்ற கூட்ட நெரிசலான இடங்களில் மிக வேகமாகப் பணம் செலுத்த இது உதவும்.

இதையும் படியுங்கள்:
UPI பயனர்களுக்கு நிம்மதி! ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை!
UPI Tap and Pay

இது எப்படிச் செயல்படுகிறது?

* இந்த வசதி NFC (Near Field Communication) என்ற வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

* உங்கள் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்து, கடைகளில் இருக்கும் மளிகை அல்லது பில்லிங் மெஷின் (POS Machine) அருகில் கொண்டு செல்ல வேண்டும்.

* உங்கள் போனில் NFC ஆன் செய்யப்பட்டிருந்தால், அது தானாகவே பில்லிங் மெஷினை கண்டறிந்து பேமெண்ட் பக்கத்திற்குச் செல்லும்.

* உங்கள் மொபைலில் NFC வசதி இருக்க வேண்டும் மற்றும் அமைப்புகளில் (Settings) NFC ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* கடையில் உள்ள NFC வசதி கொண்ட POS மெஷின் அல்லது UPI டேப் டேக் அருகில் உங்கள் மொபைலை அன்லாக் செய்து கொண்டு சென்றால் போதும்.

இதையும் படியுங்கள்:
UPI புதிய கட்டணம்: உங்க அக்கவுண்டில் இருந்து பணம் பிடிப்பார்களா? NPCI அளித்த நிம்மதி விளக்கம்!
UPI Tap and Pay

* உங்கள் மொபைல் செயலியில் (Google Pay, PhonePe, Paytm, BHIM போன்றவை) இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, UPI Lite அல்லது RuPay கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் கழிக்கப்படும்.

* கார்டைச் செருகவோ அல்லது பின் நம்பரை உள்ளிடவோ தேவையில்லை என்பதால் சில வினாடிகளில் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

* உங்களது கார்டு விவரங்கள் குறியாக்க முறைப்படி (Encryption) மாற்றப்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானது.

* உங்கள் மொபைல் மெஷினுக்கு மிக அருகில் (சில சென்டிமீட்டர் தொலைவில்) இருந்தால் மட்டுமே இந்த சிக்னல் வேலை செய்யும் என்பதால், தவறான கணக்குகளுக்குப் பணம் செல்லும் வாய்ப்போ அல்லது மோசடிகளோ நடக்காது. மேலும், இதற்காக டோக்கனைசேஷன் (Tokenisation) பாதுகாப்பு முறையும் பயன்படுத்தப்படுகிறது.

இதைப் பயன்படுத்த தேவையானவை:

* உங்கள் ஸ்மார்ட்போனில் NFC வசதி இருக்க வேண்டும்.

* உங்கள் போன் செட்டிங்ஸில் NFC-ஐ On (ஆன்) செய்து வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தவறான UPI கணக்கிற்குப் பணம் போய்விட்டதா? அதைத் திரும்பப்பெற இதோ எளிய வழிகள்!
UPI Tap and Pay

* Google Pay, Paytm போன்ற UPI ஆப்புகளில் 'Tap and Pay' வசதியை ஒருமுறை ஆக்டிவேட் செய்து, உங்கள் வங்கி கணக்கு அல்லது கார்டை அதனுடன் இணைத்திருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com