

அக்டோபர் மாத ஆன்மீக விசேஷங்கள்:
அக்டோபர் 1 : தேய்பிறை பஞ்சமி, கிருத்திகை, மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி புறப்பாடு, திருத்தணி ஸ்ரீமுருக பெருமான் பால் அபிஷேகம், சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
அக்டோபர் 2 : தேய்பிறை சஷ்டி, சித்தயோகம், தேய்பிறை சஷ்டி விரதம், காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 3 : தேய்பிறை சப்தமி, லட்சுமி பூஜை, சித்தயோகம், கரிநாள், அஷ்டமி, மத்யாஷ்டமி, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதராஜ பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
அக்டோபர் 4 : தேய்பிறை அஷ்டமி, சித்தயோகம், நவமி, அவிதவா நவமி, பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு, சமயபுரம் மாரியம்மன், இருக்கண்குடி மாரியம்மன், சோழவந்தான் ஜனகமாரியம்மன் கோவில்களில் இன்று வழிபட உகந்த நாள்.
அக்டோபர் 5 : தேய்பிறை தசமி, ஸ்ரீவைகுண்டர் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
அக்டோபர் 6 : தேய்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, சித்தயோகம், சுவாமிமலை ஸ்ரீமுருகப்பொருமானுக்கு பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
அக்டோபர் 7 : தேய்பிறை துவாதசி, அமிர்த யோகம், திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
அக்டோபர் 8 : தேய்பிறை திரயோதசி, பிரதோஷம், கஜகௌரி விரதம், சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். குருவித்துறை குருபகவானை வழிபட நன்று.
அக்டோபர் 9 : தேய்பிறை சதுர்த்தசி, மாத சிவராத்திரி.
அக்டோபர் 10 : மஹாளய அமாவாசை, மாஷா கௌரீ விரதம், ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, இன்று பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்.
அக்டோபர் 11 : வளர்பிறை பிரதமை, நவராத்திரி ஆரம்பம், சித்தயோகம், தௌஹிந்ர பிரதமை, மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.
அக்டோபர் 12 : வளர்பிறை துவிதியை, சந்திர தரிசனம், தனவிருத்தி கௌரீ விரதம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும் விக்னேஸ்வரர் கோலத்துடன் காட்சி.
அக்டோபர் 13 : வளர்பிறை திரிதியை, சித்தயோகம், மதுரை மீனாட்சியம்மனுக்கு கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக காட்சி.
அக்டோபர் 14 : வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், துர்க்கா கேசசோதனம்.
அக்டோபர் 15 : வளர்பிறை பஞ்சமி, சித்தயோகம்.
அக்டோபர் 16 : வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், கரிநாள், உபாங்க லலிதா கௌரீ விரதம், சரஸ்வதி ஆவாஹணம், மதுரை மீனாட்சியம்மன் அர்த்தநாரீஸ்வரர் காட்சி.
அக்டோபர் 17 : வளர்பிறை சப்தமி, சித்தயோகம், மதுரை மீனாட்சி தண்ணீர் பந்தலில் அருளிய காட்சி.
அக்டோபர் 18 : வளர்பிறை சப்தமி பிறகு பூராடம், அமிர்தயோகம், விஷு புண்ணிய காலம், துர்க்காஷ்டமி.
அக்டோபர் 19 : வளர்பிறை அஷ்டமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, திருவோண விரதம், மஹா நவமி.
அக்டோபர் 20 : வளர்பிறை நவமி, விஜய தசமி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நாள். விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அம்பு விடும் காட்சி.
அக்டோபர் 21 : வளர்பிறை தசமி, சித்தயோகம், துளசி கௌரீ விரதம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவை.
அக்டோபர் 22 : வளர்பிறை ஏகாதசி, சித்தயோகம், சர்வ ஏகாதசி, 1041வது ராஜராஜ சோழன் சதய விழா, திருமலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைல காப்பு உற்சவ விழா.
அக்டோபர் 23 : வளர்பிறை துவாதசி, பிரதோஷம், கரிநாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஊஞ்சல் உற்சவ சேவை.
அக்டோபர் 24 : வளர்பிறை திரியோதசி, திருவள்ளூர் வீரராக பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
அக்டோபர் 25 : வளர்பிறை சதுர்த்தசி, சுபமுகூர்த்த நாள், பௌர்ணமி, சித்தயோகம், கோமதி பூஜை, தஞ்சை பெரிய கோவில் பெரியவுடையாருக்கு அன்னாபிஷேகம். கோவில்பட்டி செண்பவல்லி அம்மன் விழா தொடக்கம்.
அக்டோபர் 26 : பௌர்ணமி, சித்தயோகம்.
அக்டோபர் 27 : தேய்பிறை பிரதமை, கார்த்திகை விரதம், சித்தயோகம், திருப்போரூர் முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
அக்டோபர் 28 : தேய்பிறை துவிதியை, வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று) சிந்ரோதய கௌரீ விரதம்.
அக்டோபர் 29 : தேய்பிறை சதுர்த்திசி, சங்கடஹர சதுர்த்தி, கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் புறப்பாடு.
அக்டோபர் 30 : தேய்பிறை பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், சித்தயோகம்.
அக்டோபர் 31 : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், சித்தயோகம், குச்சனூர் சனி பகவானுக்கு அபிஷேக ஆராதனை செய்ய நன்று, கருட தரிசனம் நன்று.