குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!அதிரடியாக குறையப் போகும் அரிசி விலை.! எவ்வளவு தெரியுமா.?

ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து குவியும் நெல் மூட்டைகள்; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
அரிசி விலை
Rice Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

வரத்து குறையும் போது காய்கறிகளின் விலை உயர்வது வழக்கமானது தான். ஆனால் வரத்து அதிகரித்ததும் உடனே விலையும் குறைந்து விடும். இம்முறை காய்கறிகளின் விலையைக் காட்டிலும் அரிசியின் விலை உயர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள் ரூ.1,300-க்கு வாங்கிய ஒரு அரிசி மூட்டையின் விலை 40%-க்கும் மேல் உயர்ந்து ரூ.1800-க்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்.

பொதுமக்களின் இன்னலைப் புரிந்து கொண்டு, கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்தது தமிழக அரசு. இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. வெகு விரைவில் தமிழ்நாட்டில் அரிசி விலை குறையப் போகிறது என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு நெல் மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று (அக்டோபர் 26) ஒரே நாளில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து 220 லாரிகளில் நெல் மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வந்துள்ளன.

அடுத்தடுத்த நாட்களில் நெல் மூட்டைகளின் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் மூட்டைகள் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சந்தையில் அரிசியின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிவும் குறைவு. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறக்காதது மற்றும் எல்-நினோ விளைவால் அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் நெல் சாகுபடி குறைந்தது. நெல் உற்பத்தி குறைவால் வரலாறு காணாத அளவில் அரிசியின் விலை உயர்ந்தது.

இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிகம் பாதித்தது. தமிழ்நாட்டில் தற்போது வரை அரிசி விலை குறையாத நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளின் வரவால் விரைவில் விலை குறையும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

லாரிகள் வரும் போது அனைத்து செக்போஸ்டுகளிலும் சோதனை நிகழ்த்தப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பால் தொடக்கத்தில் அரிசி விலை 20% குறைய வாய்ப்புள்ளது. அதாவது ரூ.2,000-க்கு விற்கப்படும் அரிசி மூட்டை ரூ.400 வரை குறையும். போகப் போக விலை சரிவு தொடர்ந்தால், அரிசி விலை மீண்டும் பழைய நிலைமைக்கே கூட திரும்பும்.

அரிசி விலை
Rice Price
இதையும் படியுங்கள்:
கல்யாண சீசனில் அடுத்தடுத்து ஷாக்: நேற்றும் உயர்ந்து இன்றும் உயர்ந்த தங்கம் விலை.!
அரிசி விலை

துவரம் பருப்பின் விலை சரிவு:

பண்டிகை காலத்தை முன்னிட்டு துவரம் பருப்பு இறக்குமதியை 44% அதிகரித்துள்ளது அரசு. இதன் காரணமாக ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை ரூ.200 வரை சரிந்துள்ளது. அரிசி விலை குறையப் போகிறது என்ற தகவல் கிடைத்திருக்கும், இந்த நேரத்தில் துவரம்பருப்பின் விலை குறைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும்.

துவரம் பருப்பு விலை குறைவு மற்றும் அரிசியின் விலை குறையப் போவது மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் இன்று வெங்காயத்தின் விலை உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நாளை முதல் ஆவினில் தயாரிக்கப்படும் 67 பால் பொருட்களின் விலை உயர்வும் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க இந்த விலையேற்றம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே கொசுவால் 3 கொடிய நோய்கள்! பருவமழையில் இருந்து தப்ப மக்கள் செய்ய வேண்டியது என்ன?
அரிசி விலை
logo
Kalki Online
kalkionline.com