

PhonePe Daily RD: இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் போன்பே ஆப் வழியாகவே டிஜிட்டல் முறையில் எஃப்.டி கணக்குகளைத் தொடங்க முடியும். மேலும், யுபிஐ ஆட்டோபே (UPI AutoPay) மூலம் தினமும் குறைந்தபட்சமாக ரூ. 100 முதல் சேமிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் சேவிங்ஸ் என்றால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் ஒதுக்க வேண்டுமோ, அந்த அளவு பணம் நம்மிடம் எங்கே இருக்கிறது என்று யோசித்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுகிறார்கள். ஆனால் நிதி நிபுணர்கள் சொல்வது என்னவென்றால்... நீங்கள் கோடீஸ்வரராக பெரிய பெரிய தொகைகள் தேவையில்லை. உங்கள் தினசரி செலவுகளில் இருந்து வெறும் நூறு ரூபாய் மட்டும் ஒதுக்கினாலே போதும் என்கிறார்கள். பார்க்கச் சிறிய தொகை போலத் தோன்றினாலும், இது உங்கள் ஃப்யூச்சரை எப்படி மாற்றும் என்று தெரிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
ஃபோன்பே செயலியில் தினசரி ஆர்.டி. முதலீடு ரூ. 100 இல் தொடங்குகிறது. இந்தத் திட்டம் சாமானிய மக்கள், இளைஞர்கள் மற்றும் ஜென்-ஜி (Gen Z) பிரிவினர் நாளொன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 1,000 வரை சிறிய அளவிலான தொகையைத் தானியங்கி முறையில் சேமிக்க உதவுகிறது.
இந்நிலையில் ஃபோன்பே நிறுவனம் (PhonePe) ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிடன் இணைந்து புதிய 'Daily RD' (தினசரி தொடர் வைப்பு நிதி- SIP)என்ற டிஜிட்டல் சிறு சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளம், பயனர்கள் டிஜிட்டல் முறையில் வைப்புத்தொகைகளைத் திறக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் எடுக்கவும் உதவுகிறது. இதில் குறைந்தபட்சம் தினமும் ரூ. 100 முதலீடு செய்து சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்கலாம். UPI Autopay மூலமாக தினமும் தானியங்கி முறையில் பணம் பிடிப்படும். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வங்கி வட்டி விகிதத்தின்படி லாபம் மற்றும் பாதுகாப்பான உறுதியான பலன்கள் கிடைக்கும்.
தினமும் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சம் ரூ. 1,000 வரை சேமிக்கலாம். வங்கிகள் மற்றும் வைப்பு நிதி விதிகளின்படி முதலீட்டிற்கான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவசரத் தேவைகளின்போது பணத்தை எளிதாகப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, கூட்டாண்மை வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு, டி.ஐ.சி.ஜி.சி (DICGC) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்கள் வெறும் 7 நாட்களுக்குப் பிறகு நிதியைத் திரும்பப் பெறலாம் அல்லது தொடர்ச்சியான 15-நாள் சலுகைக் காலத்தில் முதலீடுகளைத் தவறவிட்டால் எந்த அபராதமும் இன்றி, எப்போது வேண்டுமானாலும் இந்தச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளலாம்.
ஒரு நாளுக்கு நூறு ரூபாய் சேமிப்பதா? இது மிகவும் சிம்பிள் போலத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் அதை ஒவ்வொரு நாளும் செய்வது மிகவும் கடினம். நாம் தினமும் செய்யும் சிறிய சிறிய தேவையற்ற செலவுகளை குறைத்தாலே நாம் அற்புதமான செல்வத்தை உருவாக்கலாம்.
நீங்கள் ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால், மாதத்திற்கு அது 3000 ரூபாய் ஆகும். இந்த மூன்று ஆயிரம் ரூபாயை வெறும் வங்கி சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்தால் பணவீக்கத்தின் தாக்கத்தால் அதன் மதிப்பு குறையும்.
அதற்கு பதிலாக, இந்த மாதத்திற்கு 3000 ரூபாயை தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட்ஸில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்தால் மேஜிக் தொடங்கும்.
பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நீண்ட காலத்தில் சராசரியாக 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஆண்டு வருமானம் தருகின்றன. நீங்கள் கன்சர்வேட்டிவாக 12 சதவீத வருமானத்தை கணக்கிட்டாலும் ரிசல்ட் மைண்ட் ப்ளாக் ஆகும் அளவுக்கு இருக்கும்.
உதாரணமாக நீங்க ஒரு நாளைக்கு 100 ரூபாயை இந்த முறையில் சேமித்தால் மாதம் 3000 ரூபாய் வரும். அதுவே 5 வருடத்தில் நீங்கள் முதலீடு செய்தது ரூ.1,80,0000. உங்களுக்கு கிடைக்கும் லாபம் ரூ.67,460. மொத்தமாக உங்கள் கைக்கு ரூ.2,47,460 வரும்.
இதுவே பத்து ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்தால் ரூ.3,60,0000 வரும். உங்களுக்கு கிடைக்கும் லாபம் ரூ.3,32,323. மொத்தமாக உங்கள் கைக்கு ரூ.6,92,323 வரும்.
15 ஆண்டுகளில் லாபம் மட்டும் 10,03,733 ரூபாயும், 20 ஆண்டுகளில் 22,77,444 ரூபாயும், 25 ஆண்டுகளில் 47,92,752 ரூபாயும், 30 ஆண்டுகளின் முடிவில் 94,49,531 ரூபாயும் உங்களுக்கு லாபமாக கிடைக்கும்.
தினசரி ரூ. 100 முதலீடு (Daily RD): எவ்வாறு தொடங்குவது? (சேமிப்புத் திட்டம்)
PhonePe செயலியைத் திறக்கவும்.
'Mutual Funds & Deposits' (பரஸ்பர நிதிகள் & வைப்புத்தொகை)பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
'Daily RD' அல்லது 'Fixed Deposits' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
காட்டப்படும் பட்டியலிலிருந்து உங்களுக்கு விருப்பமான வங்கி அல்லது என்.பி.எஃப்.சி-ஐ (NBFC) தேர்ந்தெடுக்கவும்.
முதலீட்டுக் காலம் (7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை) மற்றும் முதலீட்டுத் தொகையை உள்ளிடவும்
PAN மற்றும் Aadhaar எண்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் சரிபார்ப்பை முடிக்கவும்.
பின்னர், நாமினி (Nominee) விவரங்களைச் சேர்த்து, ஃபோன்பே யு.பி.ஐ. (UPI) அல்லது நெட் பேங்கிங் மூலம் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்தி டெபாசிட்டை உடனடியாகப் பதிவு செய்யவும். தினசரி ஆர்டி திட்டத்திற்கு, UPI Autopay அனுமதியை உறுதி செய்து உங்கள் சேமிப்பைத் தொடங்கவும்.
PhonePe செயலியானது, நிலையான வைப்பு (FD) மற்றும் தினசரி தொடர் வைப்பு (RD) ஆகியவற்றை எந்நேரத்திலும் எளிதாகத் திரும்பப்பெறும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுகிறது.
நீங்கள் கண்ணுக்கு தெரியாமல் தினமும் சேமிக்கும் 100 ரூபாய் 30 ஆண்டுகளில் உங்களை கோஸ்டீவரராக மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனிமேல் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்று தோன்றினால், உடனே வாங்காமல் 24 மணி நேரம் காத்திருந்து யோசியுங்கள். அடுத்த நாளும் அந்தப் பொருள் உங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் வாங்குங்கள்.
இன்வெஸ்ட்மென்டில் டைமிங்கை விட டைம் கடத்துவது மிகவும் முக்கியம். இதுவரை நீங்கள் கடைபிடித்து வந்த சம்பளம் - செலவுகள் = சேமிப்பு என்ற ஃபார்முலாவை விடுங்கள். இனிமேல் சம்பளம் - சேமிப்பு = செலவுகள் என்ற ஃபார்முலாவுக்கு பழகுங்கள். வரும் மாற்றத்தை நீங்களே கவனியுங்கள்.