உங்கள் அக்கவுண்ட்ல இந்த ஸ்டேட்டஸ் இருக்கா? – இல்லனா பிஎம் கிசான் பணம் கிடைக்காது, உடனே செக் பண்ணுங்க

பிஎம் கிசான் 24-வது தவணை ரூ.2,000 பெறுவதற்கான e-KYC சரிபார்ப்பு மற்றும் ஸ்டேட்டஸ் செக் செய்யும் முழு வழிகாட்டி.
PM Kisan | பிஎம் கிஷான்
PM Kisan | பிஎம் கிஷான்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வரும் விவசாயிகளுக்கு 24-வது தவணைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன.

பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் மூலம் பயனடையும் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 24-வது தவணைக்கான ரூ.2,000 செலுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும், இந்தத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேளாண்மை அமைச்சகம் அல்லது பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விவசாயிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பே தவணை வரவிருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், விவசாயிகளின் இ-கேஒய்சி-ஐ (e-KYC) சரிபார்ப்பு முழுமையடையாமல் இருந்தாலோ அல்லது ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு தவணைத் தொகை வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு விவசாயியின் இ-கேஒய்சி முழுமையடையாமல் இருந்தால், அவர் அதை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில், பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 24-வது தவணை அவருக்கு கிடைப்பதற்கு தாமதமாகலாம்.

எனவே, அனைத்து விவசாயிகளும் 24-வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு தங்களது இ-கேஒய்சி-ஐ சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு, வங்கி கணக்கு நிலை (Bank Account Status), நிலப் பதிவுகள் (Land Records Verification) ஆகியவை சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்னதாகவே சரிபார்க்க வேண்டும்.

பிஎம் கிசான் 24வது தவணை நிலையை சரிபார்ப்பது எப்படி?

விவசாயிகள் தங்களது கணினி அல்லது மொபைல் போன் மூலம் வீட்டிலிருந்தபடியே தவணை நிலையை எளிதாகச் சரிபார்க்கலாம்:

இதையும் படியுங்கள்:
முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யாததால் விவசாயி உயிரிழப்பு – பாமக அன்புமணி கண்டனம்!
PM Kisan | பிஎம் கிஷான்

பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான https://pmkisan.gov.in/ பக்கத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Know Your Status' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களது பதிவு எண் (Registration Number) மற்றும் திரையில் தோன்றும் 'Captcha Code'-ஐ சரியாகப் பதிவிட்டு, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டுச் சமர்ப்பிக்கவும். இப்போது உங்கள் கணக்கின் விபரங்கள் அடங்கிய பக்கம் திறக்கும். அதில் 'Eligibility Status' என்ற பிரிவின் கீழ்:

e-KYC Status – "YES" என்று பச்சை நிறத்தில் இருந்தால், உங்கள் இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

ஒருவேளை "NO" என்று இருந்தால், நீங்கள் இன்னும் இ-கேஒய்சி செய்யவில்லை அல்லது அது முழுமையடையவில்லை என்று பொருள்.

விவசாயிகள் தவணைத் தொகை வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியை அறிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிஎம் கிசான் 24வது தவணை
பிஎம் கிசான் 24வது தவணை

பிஎம் கிசான் திட்டத்திற்கு இ-கேஒய்சி (e-KYC) செய்வது எப்படி?

பிஎம் கிசான் (PM-KISAN) திட்டத்தில் பயனாளிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் எளிதாக eKYC செய்து கொள்ளலாம்.

இணையதளம் மூலம் :

அதிகாரப்பூர்வமான பிஎம் கிசான் இணையதளத்திற்கு சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Farmers’ Corner’ (விவசாயிகள் மூலை) பகுதியில் ‘e-KYC’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு 'Search' (தேடு) பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'Get Mobile OTP' என்பதை அழுத்தி, உங்கள் தொலைபேசிக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். சரிபார்ப்பு முடிந்ததும் உங்கள் eKYC வெற்றிகரமாக நிறைவடையும்.

பிஎம் கிசான் மொபைல் செயலி மூலம் (Face Authentication):

முதலில், விவசாயிகள் கூகுள் பிளே ஸ்டோரில் பிஎம் கிசான் செயலி (PMKISAN GoI) மற்றும் ஆதார் ஃபேஸ் ஐடி செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி செயலியில் உள்நுழைந்து, இ-கேஒய்சி (e-KYC) என்பதைக் கிளிக் செய்து ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% இலவச உதவி… சென்னையில் பிரதம மந்திரி திவ்யஷா மையங்கள் திறப்பு!
PM Kisan | பிஎம் கிஷான்

இதற்குப் பிறகு முகப்புப் பக்கத்தில் உள்ள Face Authentication (முக அங்கீகாரம்) வசதியைப் பயன்படுத்தி, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து eKYC செய்து கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் உங்கள் இ-கேஒய்சி நிறைவு செய்யப்படும்.

பொது சேவை மையம் (CSC) மூலம்:

உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (Common Service Centre - CSC) நேரில் செல்லவும். அங்கு Biometric (கைரேகை அல்லது கருவிழி) சரிபார்ப்பு மூலம் e-KYC செய்து கொள்ளலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi) என்பது மத்திய அரசின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு (DBT) வரவு வைக்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கடைசி தவணை ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.18,880 கோடிக்கும் அதிகமான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிஎம் கிசான் 14வது தவணை.. இன்று உங்கள் அக்கவுண்டில் ரூ.2000!
PM Kisan | பிஎம் கிஷான்

தற்போது வரும் அக்டோபர் 30-ஆம் தேதி 24-வது தவணைக்கான ரூ.2,000 செலுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com