பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது? முழு விவரம்..!

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தேதிகள் மற்றும் முழுமையான கால அட்டவணை விவரங்கள்.
ticket booking counter
ticket booking counterAI Image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுச் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் எப்போது தொடங்குகிறது என்பதை தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தேதிகள் மற்றும் விவரங்கள் இதோ.

அதற்குள் தீபாவளிப் பண்டிகை முடிந்துவிட்டதே என்று சோகத்தோடு ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியவர்களுக்கு அடுத்த கொண்டாட்டமான செய்திதான் இது. 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பயன்பெறும் வகையில், ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் நவம்பர் 13-ம்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் பணி செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலானோர் ரெயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரெயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

சென்னையில் தங்கி பணிபுரியும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்களும் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம்தேதி போகிப் பண்டிகையும், பொங்கல் பண்டிகை 15-ம்தேதி வெள்ளிக்கிழமையும், மாட்டுப்பொங்கல் 16-ம்தேதியும், காணும் பொங்கல் 17-ம்தேதியும் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்திய ரெயில்வேயின் 60 நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்யும் (ARP) புதிய விதியின்படி, 2027 ஜனவரி மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊர் செல்ல விரும்புவோர் தற்போதே தங்களது பயணத் திட்டமிடலைத் தொடங்க வேண்டும்.

உங்களுக்கான பொங்கல் 2027 ரயில் டிக்கெட் முன்பதிவு கால அட்டவணை (Booking Calendar) இதோ:

பொங்கல் பயண முன்பதிவு தேதிகள் விவரம்:

ஜனவரி 12-ம்தேதி பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் நவம்பர் 13-ம்தேதி தொடங்குகிறது.

ஜனவரி 13-ம்தேதி பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் 14-ம்தேதி தொடங்குகிறது.

ஜனவரி 14-ம்தேதி (போகிப் பண்டிகை) பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் 15-ம்தேதி தொடங்குகிறது.

ஜனவரி 15-ம்தேதி (பொங்கல் பண்டிகை) பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் 16-ம்தேதி தொடங்குகிறது.

ஜனவரி 16-ம்தேதி (மாட்டுப் பொங்கல்) பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் 17-ம்தேதி தொடங்குகிறது.

Ticket Reservation|ரயில் டிக்கெட்
Diwali Train Travel|ரயில் டிக்கெட்

ஜனவரி 17-ம்தேதி (காணும் பொங்கல்) பயணத்திற்கான முன்பதிவு வரும் நவம்பர் 18-ம்தேதி தொடங்குகிறது.

மீண்டும் சென்னை திரும்புவதற்கான (Return Ticket) முன்பதிவு தேதிகள்:

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவதற்கும் முறையான திட்டமிடல் அவசியமாகிறது.

மீண்டும் ஊர் திரும்பிச் செல்ல ஜனவரி 18-ம்தேதி பயணத்திற்கான முன்பதிவு வரும்நவம்பர் 19-ம்தேதி தொடங்குகிறது.

மீண்டும் ஊர் திரும்பிச் செல்ல ஜனவரி 19-ம்தேதி பயணத்திற்கான முன்பதிவு வரும்நவம்பர் 20-ம்தேதி தொடங்குகிறது.

முன்பதிவு செய்யும் முறை:

* வழக்கம்போல் ரெயில்களில் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

* தினமும் காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்:
முன்பதிவு டிக்கெட்டில் இப்படியொரு சிக்கலா.? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
ticket booking counter

* IRCTC இணையதளம், செயலி அல்லது ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர்கள் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.

டிக்கெட் எளிதாகக் கிடைக்க சில முக்கியமான ஆலோசனைகள்:

* முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே IRCTC இணையதளம் அல்லது செயலியில் உங்கள் குடும்பத்தினரின் பெயர், வயது போன்ற விவரங்களை 'Master List' பிரிவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இது டிக்கெட் புக் செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்தும்.

* நெட் பேங்கிங் அல்லது கார்டுகளை விட UPI (BHIM/Google Pay/PhonePe) மூலம் பணம் செலுத்துவது வேகமானது மற்றும் தோல்விகள் குறைவு.

* நவம்பர் 13-ம்தேதி முதல் 20-ம்தேதி வரை தினசரி காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குவதால், அதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே (காலை 7:50 மணி) லாகின் செய்து தயாராக இருப்பது நல்லது.

பண்டிகை நேரப் பயண நெருக்கடியைத் தவிர்க்க இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சமயங்களில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் என்பதால், முன்பதிவு தொடங்கும் நாளன்றே சரியான நேரத்தில் திட்டமிட்டு டிக்கெட் எடுப்பது தடையற்ற மற்றும் மகிழ்ச்சியான பண்டிகைப் பயணத்தை உறுதி செய்யும்.

இதையும் படியுங்கள்:
ரெயில் டிக்கெட் முன்பதிவு: ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் செலுத்தினால் கூடுதல் கட்டணமா?
ticket booking counter

பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட இப்போதே திட்டமிட்டு, உங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்ளுங்கள்!