தபால் அலுவலகத்தில் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால் 2 வருடத்தில் இவ்வளவு லாபமா..?

போஸ்ட் ஆபிஸில் 2 வருட காலத்திற்கு 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், வட்டியோடு சேர்த்து நல்ல லாபம் கைக்குக் கிடைக்கும்.
Post Office Saving Schemes
Post Office Saving Schemes
Updated on

இன்றைய காலகட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யோசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சந்தையில் பல முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சிலவற்றில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதலீடுகள் மூலம் நிலையான வருமானம் (Fixed Income) பெறுவது என்பது உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவதாகும். இதற்கு வங்கிகள், அரசுத் திட்டங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளின் கடன் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

அந்த வகையில் இன்று பல முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சிலவற்றில் ஆபத்து உள்ளது. அதுவே, அரசாங்க ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டங்கள், பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புத் திட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தில் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாக கருதப்படுகின்றன.

காரணம், அரசு ஆதரவு பெற்ற குறைந்த அபாய முதலீட்டு திட்டம் என்பதால் இதில் போடும் பணத்திற்கு நல்ல பாதுகாப்பு இருப்பதோடு, உத்தரவாதமான வருமானமும் கிடைக்கிறது. அந்த வகையில் வங்கி அல்லது தபால் நிலையங்களில் உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து, முதிர்வு அல்லது மாதந்தோறும் வட்டியாக நிலையான வருமானம் பெறலாம்.

இந்தியாவில் பொதுவாக நடுத்தர மற்றும் சமானிய மக்கள் முதலீடு என்று யோசித்தாலே முதலில் அவர்களின் நினைவுக்கு வருவது வங்கிகளில் போடப்படும் பிக்சட் டெபாசிட் தான். சமீப காலமாக அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக, பொது வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக சற்று கூடுதல் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால், பெரும்பாலான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெயரில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஏனெனில் வட்டி அதிகமாக கிடைக்கும் என்ற காரணத்தால்.

வங்கிகளுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் வங்கிகளை விட பாதுகாப்பாகவும், கூடுதல் பலன்களுடனும் மத்திய அரசின் கீழ் இயங்கும் போஸ்ட் ஆபீஸ் பல திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்தான். இன்றைய காலகட்டத்தில், அனைவரும் சிறிய முதலீட்டிலிருந்து பெரிய நிதியை உருவாக்க உதவும் திட்டங்களிய பெரிதும் விரும்புகிறார்கள்.

வங்கி டெபாசிட்களை விடப் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் மிகக் குறைவு என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாலும் மக்கள் இதில் முதலீடு செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் குறைந்த தொகையை முதலீடு செய்து பெரிய தொகையை பெற விரும்பினால், போஸ்ட் ஆபீசின் தொடர் வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். போஸ்ட் ஆபீசில் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் போஸ்ட் ஆபீஸ் நேர வைப்புத் திட்டம். இது வங்கிகளின் பிக்சட் டெபாசிட் (நிலையான வைப்பு நிதி)திட்டத்தை போன்றதே ஆகும்.

post office investment
post office investment|போஸ்ட் ஆபீஸ்

இந்த திட்டத்தின் கீழ், 1 வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் அல்லது 5 வருட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யும் வகையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான கால அளவை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இப்போது வழங்கப்படும் வட்டி விகிதங்களின்படி, 1 வருட நிலையான வைப்பு நிதிக்கு 6.9 சதவீத வட்டியும், 2 வருட நிலையான வைப்பு நிதிக்கு 7.0 சதவீத வட்டியும், 3 வருட நிலையான வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், 5 வருட நிலையான வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தபால் அலுவலகத்தின் 2 வருட நிலையான வைப்பு நிதி (Time Deposit - TD) திட்டத்தில் ரூ.1,00,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.00% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு (compounded) செய்யப்படும்.

இதன் மூலம், முதிர்வு முடிவில் உங்களுக்கு மொத்தமாக சுமார் ரூ.1,14,888 கிடைக்கும். அதாவது, உங்கள் அசல் ரூ.1,00,000 உடன் வட்டியாக ரூ.14,888 கூடுதலாக கிடைக்கும்.

முதலீட்டு விவரங்கள்:

திட்டம்: தபால் அலுவலக நிலையான வைப்பு (Post Office Term Deposit)

வைப்புத்தொகை: ரூ.1,00,000

காலம்: 2 ஆண்டுகள்

வட்டி விகிதம்: 7.00%

இதையும் படியுங்கள்:
அருமையான திட்டம்..! தபால் துறையில் ரூ.100 சேமித்தால் ரூ.2,15,000க்கும் மேல் கிடைக்கும்..!
Post Office Saving Schemes

கிடைக்கும் மொத்த தொகை: ரூ.1,14,888

வட்டியாக மட்டும் : ரூ. 14,888

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவம், ஆதார், பான் கார்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பித்து, ஒரு சேமிப்புக் கணக்கை தொடங்கி, உங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும், அஞ்சல் துறை இணையதளம் மூலமாகவும் இத்திட்டத்தில் இணையலாம்.

இதையும் படியுங்கள்:
வரியும் இல்லை, ரிஸ்க்கும் இல்லை! தபால் துறையின் டாப் 7 சேமிப்புத் திட்டங்கள் - ஒரு விரிவான பார்வை..!!
Post Office Saving Schemes

பணவீக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இல்லாததால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் உறுதியான மற்றும் ரிஸ்க் இல்லாத வருமானத்தைப் பெறுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com