கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ரூ.11,000 வரை நிதியுதவி பெறலாம்.! எப்படி விண்ணப்பிப்பது..?

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான PMMVY திட்டத்தின் மூலம் ரூ.11,000 வரை நிதியுதவி பெறும் தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிமுறைகள்.
pradhan mantri matru vandana yojana scheme|உதவித்தொகை
PMMVY scheme|உதவித்தொகைimg credit- jansatta.com
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் மகப்பேறு நிதியுதவி திட்டமாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனுக்காக 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' (PMMVY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2017 ஜனவரி 1 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது ஒன்பது ஆண்டுகள் வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, இதுவரை நாடு முழுவதும் சுமார் 4.5 கோடி பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். அரசு இதுவரை ரூ.19,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடியாகத் தாய்மார்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளது. இந்த வசதி நாட்டின் அடித்தட்டுப் பெண்களைச் சென்றடைந்துள்ளது ஒரு பெரிய சாதனையாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு சத்தான உணவையும் ஓய்வையும் வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது தாய்மைப் பாதையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிரமங்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

முதல் குழந்தைக்கு ரூ.5,000 + இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்து அதற்கு ரூ.6,000 சேர்த்தால் மொத்தம் ரூ.11,000 வரை பலன் பெறலாம் என கூறப்படுகிறது. இந்தத் தொகை இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் உண்மையான நிதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிதியுதவி விவரம்:

முதல் குழந்தைக்காக: மொத்தம் ரூ.5,000 இரண்டு தவணைகளில் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

* கர்ப்பத்திற்குப் பிறகு பெயர் பதிவு செய்யப்பட்ட உடனேயே ரூ.3,000 முதல் தவணையாகக் கிடைக்கிறது. கர்ப்பம் தரித்த 6 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு முறையாவது கர்ப்பகால மருத்துவப் பரிசோதனை (Ante-Natal Check-up) செய்திருக்க வேண்டும்.

* மீதமுள்ள இரண்டாம் தவணை ரூ.2,000 குழந்தை பிறந்து பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்து, முதல் சுற்று தடுப்பூசிகள் (14 வாரங்கள் வரை) போடப்பட்ட பிறகு வழங்கப்படும்.

* இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால் மட்டும்) பிறந்த பிறகு மற்றும் தடுப்பூசிகள் முடிந்தவுடன் ஒரே தவணையாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.

மேலும், இதனுடன் ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் நிதியுதவியும் இணைத்துப் பெறலாம்

முக்கியத் தகுதிகள்:

* விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Central government
Central government

* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

* முதல் முறை கருவுறும் பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் (இரண்டாவது குழந்தைக்கு பெண் குழந்தையாக இருந்தால் மட்டுமே கூடுதல் தொகை உண்டு).

* மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் உள்ளவர்கள் இதற்குத் தகுதியற்றவர்கள்.

* BPL குடும்ப அட்டைதாரர்கள், SC/ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், இ-ஷ்ரம் (e-Shram) அட்டைதாரர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGA) அட்டைதாரர்கள் அல்லது ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் ஆகியோரில் ஏதேனும் ஒரு பிரிவில் வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

தாயின் ஆதார் அட்டை (ஆதாருடன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்).

MCP / RCHI அட்டை (தாய் மற்றும் சேய் பாதுகாப்பு அட்டை)

கடைசி மாதவிடாய் தேதி (LMP Date) மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் பதிவு செய்த விவரங்கள்

பயனாளியின் ஆதார் அட்டை (Aadhaar Card).

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை தரும் மத்திய அரசு - ரூ.6000 பெறுவது எப்படி?
pradhan mantri matru vandana yojana scheme|உதவித்தொகை

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட (DBT Enabled) வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தக நகல் (Bank/Post Office Passbook).

குழந்தை பிறப்புச் சான்றிதழ் மற்றும் குழந்தைக்கான தடுப்பூசி விவரங்கள் (2-வது தவணைக்கு)

தகுதிச் சான்றிதழ் (வருமானச் சான்று, சாதிச் சான்று, ரேஷன் கார்டு அல்லது இ-ஷ்ரம் அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று).

மொபைல் எண்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், உங்கள் பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மையம் (Anganwadi Centre) அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் (Primary Health Centre) உள்ள செவிலியர்/பணியாளர்கள் மூலம் பதிவு செய்யலாம்.

அல்லது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PMMVY இணையதளம் அல்லது உமாங் (UMANG) செயலி வழியாக நீங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், பணம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

இத்திட்டத்தின் நோக்கம் பணம் வழங்குவது மட்டுமல்ல, தாய் மற்றும் குழந்தை நலனில் கவனம் செலுத்துவதும் ஆகும். கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு குட்நியூஸ்: இனி லோயர் பெர்த் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம்!
pradhan mantri matru vandana yojana scheme|உதவித்தொகை

இத்திட்டம், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கவும், முறையான ஊட்டச்சத்து மூலம் சிசு மரண விகிதத்தைக் குறைக்கவும் உதவுகிறது.