இன்று முதல் ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி பால் விலை உயர்கிறது..! லிட்டருக்கு ரூ.30 வித்தியாசம்..!

ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விலையை உயர்த்திய நிலையில் ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி நிறுவனங்களும் தங்களது பால் விலையும் உயர்த்தியுள்ளது.
பால் விலை உயர்வு
பால் விலை உயர்வுAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் சமானிய மக்களின் தினசரி பயன்பாட்டில் இருக்கும் முக்கிய உணவுப் பொருட்களில் பால் முக்கிய இடம் வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாலைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தேநீர், காபி, சமையல் மற்றும் காலை உணவுக்குப் பால் மிகவும் அவசியமாகிறது.

கடந்த 21-ம்தேதி தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையிலும் உயர்த்தியது. இந்நிலையில் டோட்லா (Dodla), ஹெரிடேஜ் (Heritage), திருமலா (Thirumala), சீனாவாசா (Srinivasa), வல்லபா (Vallabha), ஜெர்சி (Jersey) உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் ரூ.4 வரை அதிரடியாக பால் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது.

ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்ற சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அந்நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால் வேறு வழியின்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தொடங்கின.

பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஏற்பட்ட நிதியிழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் கடந்த 21-ம்தேதி ஆவின் பாலுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா (Aarogya) பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையிலும் உயர்த்தியது.

இந்நிலையில் ஆரோக்யாவை தொடர்ந்து, டோட்லா (Dodla), ஹெரிடேஜ் (Heritage), திருமலா (Thirumala), சீனாவாசா (Srinivasa), வல்லபா (Vallabha), ஜெர்சி (Jersey) உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் இன்று (செப்டம்பர் 26) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விலையை கிலோவிற்கு ரூ.2 உயர்த்துவதாக அறிவித்துள்ளது சமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பால் விலை
பால் விலைimage credit-dailythanthi.com

ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு இந்த விலை ஏற்றம் மேலும் துயருக்குள்ளாக்கும்.

அதன்படி 500 மி.லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31 இருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும், 1000 மி.லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-ல் இருந்து ரூ. 61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-ல் இருந்து ரூ. 70 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.78-ல் இருந்து ரூ. 81 ரூபாயாகவும், 500 கிராம் தயிர் ரூ.41-ல் இருந்து ரூ. 42 ரூபாயாகவும், அதிக செறிவூட்டப்பட்ட தயிர் ரூ.36-ல் இருந்து ரூ. 37 ரூபாயாகவும் விற்பனை விலை உயர்த்தப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
லிட்டருக்கு ரூ.80-ஐத் தொட்ட தனியார் பால் விலை: அதிர்ச்சியில் தமிழக மக்கள்!
பால் விலை உயர்வு

இந்த புதிய விலை இன்று (செப்டம்பர் 26) முதல் அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆவின் பால் கிடைக்காமல் தனியார் பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் இனி அரை லிட்டர் பாலுக்கு ரூ.2 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம், ஏற்கெனவே பால் வாங்குவதற்காக மாதந்தோறும் கணிசமான தொகையைச் செலவிடும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தனியார் பால் விலை உயர்வு காரணமாக டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கப் டீ அல்லது காபியின் விலை வழக்கத்தை விட ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தனியார் பால் நிறுவனங்களின் இந்த விலை உயர்வால், ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்குமான விலை வித்தியாசம் 500 மி.லி சமன்படுத்தப்பட்ட பாலுக்கு 7 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு 15 ரூபாயாகவும், கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கு 12 ரூபாயாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்கள் ஷாக்..!!அதிரடியாக பால் விலையை உயர்த்திய ‘ஆரோக்யா’..!!
பால் விலை உயர்வு

அதாவது, ஒரு லிட்டருக்குக் குறைந்தபட்சம் 14 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை விலை வித்தியாசம் இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவனம் ஆவின் பக்கம் திரும்பக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com