குட் நியூஸ்..!! அனைத்து வங்கி ATM-களில் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்..!!

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
ATM Machine...
ATM Machine...
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தத்தின் போது, பொதுமக்கள் எந்த வங்கி ATM-களையும் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வரும் 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (புதன்கிழமை) வரை வேலைநிறுத்தம் (வங்கி வேலைநிறுத்தம்) நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வங்கிகளுக்கு தற்போது முதல் மற்றும் 3-வது சனிக்கிழமை வேலை நாட்களாகவும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகவும் உள்ளன. ஆனால் சனிக்கிழமை வேலை நாளை முற்றிலும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் அதனை ஈடு செய்யும் வகையில் 5 நாட்கள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற வங்கிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

5 நாட்கள் வேலை தொடர்பாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால், நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த 3 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதால் 5 நாட்கள் வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை மற்றும் ATM-களில் பணம் எடுத்தல் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் தகவல்களை அனுப்பி வருகிறது. மேலும் இணையதள சேவைகள், ஏ.டி.எம்.கள், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தொழில் நிறுவனங்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறு வியாபாரிகள் தங்களது அன்றாட பணம் மற்றும் காசோலை பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதால் ATM-களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

வங்கி வேலைநிறுத்தம்
வங்கி வேலைநிறுத்தம்AI Image

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கிகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ATM-களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவதாக அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்தம் நடைபெறும் 3 நாட்களிலும் தங்களுடைய வங்கியின் ATM மட்டுமின்றி, மற்ற எந்த வங்கியின் ATM-களையும் கூடுதல் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் (5 முறைக்கு மேல்) ATM பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்த 3 நாட்களுக்கு அந்த மாதாந்திர இலவச வரம்பைத் தாண்டினாலும் எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.

இதையும் படியுங்கள்:
தற்காலிக வேலை உலகத்தில் தப்பிப்பிழைப்பது எப்படி? ஐடி ஊழியர்களின் எதிர்காலம்!!
ATM Machine...
இதையும் படியுங்கள்:
நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்... வங்கி சேவை முடங்கும் அபாயம்?
ATM Machine...

எனவே, அவசரப் பணத்தேவை உள்ளவர்கள் எந்த வங்கி ATM-ஐயும் கட்டணக் கவலையின்றிப் பயன்படுத்தலாம். கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ATM மையங்களை பயன்படுத்தலாம்.

இருப்பினும், இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடவில்லை; மாறாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI), இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் (PSUs) மற்றும் மண்டல ஊரக வங்கிகள் (RRBs) தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகையை நேரடியாக அறிவித்துள்ளன.

பொதுவாக எந்த வங்கியில் வாடிக்கையாளராக இருக்கிறோமோ அந்த வங்கி ATM-களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.30 வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதேபோல பிற வங்கி ATM-களில் பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் எந்த வங்கி ATM-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மக்களை நிம்மதி அடையச்செய்துள்ளது.

மேலும் வேலைநிறுத்த காலத்தில் ATM-கள் மட்டுமே பொதுமக்களுக்கு கை கொடுக்கும் என்பதால் அனைத்து ATM-களிலும் பணத்தை முழுமையாக நிரப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வங்கி செக்கில் இருக்கும் ரகசிய பாதுகாப்பு அம்சங்கள்: CTS-2010 செக் பேப்பர் மோசடியை தடுப்பது எப்படி?
ATM Machine...

இதற்கிடையில் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்புகளுடன் நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், ஒரு வேளை இன்று மாலைக்குள் உடன்பாடு ஏற்பட்டு, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டால் நாளை வங்கிகள் செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com