இனி ரேஷன் கடைகளில் பணியாளர்கள் எடை போட தேவையில்லை! வந்தாச்சு டிஜிட்டல் பாக்கெட் சிஸ்டம்!

அரிசி, சீனி, கோதுமை இனி கிடங்குகளில் இருந்தே 'ப்ரீ-பேக்ட்' ஆக விநியோகம்; மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு வீடு தேடி வரும் ரேஷன்
ரேஷன் பொருட்கள்
ரேஷன் பொருட்கள்AI Image
Updated on

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வீட்டிற்குத் தேவையான அரிசி, துவரம்பருப்பு, சீனி (சர்க்கரை), பாமாயில் பாக்கெட் போன்ற பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்படி பொருட்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ், நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக அந்தந்த ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அங்காடிகளில் இறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டு கோடியே ஐந்து லட்சம் அளவில் காா்டுதாரா்கள் இதன் மூலம் பயன் அடைகிறாா்கள். இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 35,083 ரேஷன் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.

ரேஷன் விநியோகத்தில் பல வருடங்களாக ஒரு குறைபாடு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து பொருட்கள் கடைகளுக்கு வரும்போதே சாக்கு ஓட்டைகள் வழியாகவும், ஏற்றி இறக்கும் போது அங்கங்கே சிந்தியும் எடை குறைவாகவே வந்து சேருகின்றன. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, சம்பந்தப்பட்ட அங்காடிப் பணியாளர்கள் பொதுமக்களுக்குப் பொருட்களை அளந்து கொடுக்கும் போது எடையை குறைப்பதாக புகார்கள் எழுகின்றன.

மேலும், ரேஷன் அங்காடிகளில் உள்ள பொருட்களை எலி, பூனை போன்ற உயிரினங்கள் கடித்துக் குதறுவதால் அரிசி மற்றும் ஏனைய பொருட்கள் பெருமளவில் சேதமடைகின்றன. சில அங்காடிகளில் பணியாளர்களும் பொருட்களை பத்திரமாகப் பாதுகாப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ், 65 வயதுக்கு மேல் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) மாதத்தின் முதல் வாரத்திற்குள் வீடு தேடியே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தவெக அரசும் ஆதரவற்ற விதவைகள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முதன்மை நோக்கமே சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, வறுமைக்கோட்டிற்கு மிகக் கீழே வாழும் குடும்பங்களை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று துல்லியமாக கண்டறிவதாகும்.யாராலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் தங்களை கவனித்து கொள்ள ஆள் இல்லாத தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டம் வெறும் ரேஷன் பொருட்களை வீடு தேடித் தருவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை, இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி நேரடியாக சென்றடைவதையும் உறுதி செய்கிறது.

ration card type
ration card

இதனிடையில், ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய தவெக அரசானது மிகச் சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ரேஷன் பொருட்கள் தரமாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், எடைக்குறைவுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், இனி பொருட்களை தரமான பாலிதீன் பைகளில் முன்கூட்டியே எடை போட்டு, சீல் வைக்கப்பட்டு (Pre-packed) கடைகளுக்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது அரிசி 5 கிலோ, 10 கிலோ பாக்கெட்டுகளாகவும், சீனி 1 கிலோ பாக்கெட்டாகவும், கோதுமை 5 கிலோ பாக்கெட்டாகவும் கிடங்குகளில் இருந்தே எடை போட்டு அனுப்பப்படும். இதனால் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் தனியாக எடை போட வேண்டிய அவசியமும் சிரமமும் நீங்கிவிடுகிறது. பொதுமக்கள் ஏமாறுவதற்கும், எடை குறைவாக பொருட்கள் விநியோகிக்கப்படுவதற்கும் வாய்ப்பே இல்லை.

இதையும் படியுங்கள்:
தியேட்டரை தொடர்ந்து ஓடிடிக்கு வரும் 'கட்டா குஸ்தி 2'... எப்போ? எங்கே தெரியுமா?
ரேஷன் பொருட்கள்
இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு நாளும் 26,000 இறப்புகள்! உலகை அச்சுறுத்தும் புற்றுநோய்: WHO-வின் அதிர்ச்சி அறிக்கை
ரேஷன் பொருட்கள்
logo
Kalki Online
kalkionline.com