ரேஷன் அட்டைத்தாரர்ககள் கவனத்திற்கு..! குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

எந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ரேஷன் கார்டு
ரேஷன் கார்டுAI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் e-kyc மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக்கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது.

மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தொடர்ந்து 6 மாதங்கள் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத அல்லது இறப்பு, இடமாற்றம் அல்லது போலி கார்டுகள் போன்ற குடும்ப அட்டைகளை அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த முடக்கப்பட்ட கார்டுகளை மீண்டும் புதுப்பிக்க 3 மாத அவகாசம் வழங்கப்பட்டு, அதற்குள் e-KYC செய்ய வேண்டும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தகவலைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டில் e-KYC செய்யாத காரணத்திற்காக அக்டோபர் 1 முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது மற்றும் ரேஷன் அட்டைகள் முடக்கப்படாது என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியாகும்.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் e-kyc மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் e-KYC சரிபார்ப்பு செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

tamil nadu government
tamil nadu government

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நியாய விலைக் கடைகளில் தொடர்ச்சியாகப் பொருட்கள் வாங்காமல் இருக்கும் 'முன்னுரிமை (PHH)' மற்றும் 'அந்தியோதயா அன்ன யோஜனா (AAY)' குடும்ப அட்டைகளை மட்டுமே தற்காலிகமாக முடக்குவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அட்டைகள் கூட உடனடியாக முழுமையாக ரத்து செய்யப்படாது; அட்டைதாரர்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் இந்த ஆணை குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களுக்கு இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவானது விடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை...அரசின் முக்கிய அறிவிப்பு..!!
ரேஷன் கார்டு

தமிழ்நாட்டில் அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலமாக ஏற்கனவே 96.69% e-KYC சரிபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. e-KYC செய்யாதவர்கள் நீங்கள் வசிக்கும் உங்கள் வீட்டின் அருகே உள்ள நியாயவிலை கடைக்கு நேரடியாக சென்று e-KYC புதுப்பித்தலை செய்துகொள்ளலாம்.

மேலும், இன்னும் e-KYC முடிக்காத பொதுமக்கள், தங்களின் வழக்கமான ரேஷன் பொருட்களை வாங்கச் செல்லும்போது நியாய விலைக்கடைகளில் உள்ள e-POS கருவியில் கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி சரிபார்ப்பு (Biometric/Iris) மூலம் தங்களது விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நாளை முதல் ரேஷன் கார்டுகள் முடக்கம்! 1.58 கோடி பேருக்கு மத்திய அரசு செக்!
ரேஷன் கார்டு

எனவே, பொதுமக்கள் இந்த வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை. பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கும் பொருட்கள் தடையின்றி வழங்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com