ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது..!

ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகள் மூடல்
ரேஷன் கடைகள் மூடல்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் என்கிற ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி,கோதுமை, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல் பலதுறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும், கல்வித் தகுதியற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் (02.11.2026 முதல் 04.11.2026 வரை) தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், முதல் நாளில் மாவட்ட தலைநகரங்களிலும், 2-வது நாளில் கோட்ட அளவிலும், 3-வது நாளில் வட்ட அளவிலும் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தி எவ்வித தீர்வு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ரேஷன் கடை
Ration shop|ரேஷன் கடை

கோரிக்கைகள் குறித்து இதுநாள் வரை எந்தவித முன்னேற்றமான செய்தியும் வெளிவராத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டமாக வரும் நவம்பர் 2,3,4 தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகள் மூடல் - முக்கியக் கோரிக்கைகள்:

* +2 கல்வித் தகுதியுடைய விற்பனையாளருக்கு இன்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் நிலவி வருகிறது.

* 10வது கல்வித் தகுதியுள்ள எடையாளருக்கும் (Packers) கிராம உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் இருக்கிறார்கள்.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசும், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் புளுடூத் முறையில் இணைத்து சரியான எடையில் அனைத்து பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!
ரேஷன் கடைகள் மூடல்

* அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.

* ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளுக்கு, கடைநிலை ஊழியர்களை மட்டும் தண்டிப்பதோ அல்லது பழிவாங்குவதோ கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

* நியாய விலைக்கடை பணியாளருக்கு தனியாக நிதி ஒதுக்கி மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும்.

* ஓய்வூதியம் ரூ. 10,000 வழங்கப்பட வேண்டும்.

* நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த பொது விநியோகத் திட்டத்திற்கென (PDS) தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

* நியாய விலைக்கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்

* அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த சில மாதங்களாகத் தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடமிருந்து எவ்வித சாதகமான முடிவுகளும் அறிவிக்கப்படாததால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! ரேஷன் கடை குறித்த புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்..!
ரேஷன் கடைகள் மூடல்

இதற்கிடையே இந்த 3 நாட்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

logo
Kalki Online
kalkionline.com