"அதிமுக எம்எல்ஏ-க்களை திருடி விட்டார்கள்" கொதித்தெழுந்த இபிஎஸ்.! பரபரப்பு வீடியோ.!

"ரீல்ஸ் மட்டுமே தவெகவின் முதலீடு" - மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி வைத்த காரசார குற்றச்சாட்டு.
இடைத்தேர்தல்
ADMK
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பெற அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் தவெக வேட்பாளர்களை ஆதரித்து மதுராந்தகத்தில் 2 நாட்களும், தாராபுரத்தில் 1 நாளும் பரப்புரை மற்றும் ரோடு ஷோ மேற்கொண்டார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை தாராபுரத்தில் ரோடு ஷோ மேற்கொள்கிறார் முதல்வர் விஜய்.

தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா என முதல்வரை விமர்சனம் செய்தார் இபிஎஸ்.

இதையும் படியுங்கள்:
அம்பும் தப்பல, தங்கமும் தப்பல.! இந்தியாவுக்கு 17-வது தங்கம் பெற்றுத் தந்த 17 வயது சிங்கப்பெண்.!
இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் பரப்புரையின் போது இபிஎஸ் பேசுகையில், “எங்கள் தலைவர் முகத்தைப் பார்த்தாலே ஓட்டு விழுந்து விடும் என்கிறார்கள் தவெக-வினரும், இரண்டாம் கட்சித் தலைவர்களும். அப்படி என்றால் ஏன் 2 நாட்களாக தெருத் தெருவாக வீதி வீதியாக மதுராந்தகத்தில் ஓட்டு கேட்டார் முதல்வர்.

நேற்று முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டியதைப் பார்த்தேன். டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? தமிழக விவசாயிகளுக்காக அவர் என்ன செய்தார்? மக்கள் ஒருமுறை தான் ஏமாறுவார்கள். இன்னொரு முறை ஏமாற மாட்டார்கள்.

அந்த TVK கட்சிக்கு ரீல்ஸ் மற்றும் ரீல் தான் முதலீடு. இதை வைத்து தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்கள். அதுவும் மைனாரிட்டி ஆட்சி. அந்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தான் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள்.

கிராமங்களில் ஆடுகளைத் திருடினால் ஆட்டுத் திருடன் என்பார்கள். கோழிகளைத் திருடினால் கோழித் திருடன் என்பார்கள். மாடுகளைத் திருடினால் மாட்டுத் திருடன் என்பார்கள். எம்எல்ஐக்களை திருடினால் என்ன சொல்வது… தவெக ஒரு திருட்டு சக்தி.. அதிமுக எம்எல்ஏக்களை திருடி விட்டார்கள்.

அதிமுகவின் பொருளை தவெக திருடி விட்டது. இதற்கு நீங்கள் தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்” என இபிஎஸ் பேசினார்

இதையும் படியுங்கள்:
லஞ்சம் என்றாலே பயம் வரணும்.!! அரசு அதிகாரிகளுக்கு மதுரை நீதிமன்றத்தின் மரண அடி.!
இடைத்தேர்தல்

இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தவெக ஒருபுறம் திமுக மற்றும் அதிமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், திராவிட கட்சிகள் இரண்டும் தவெக-வை விமர்சனம் செய்து வருகின்றன.

இடைத்தேர்தலில் இந்த 3 கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவினாலும், நாதக மற்றும் இடதுசாரிகளும் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என கள நிலவரங்கள் கூறுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com