மக்களே நோட் பண்ணிக்கோங்க... இந்த நாளில் யாரும் ரேஷன் கடைக்கு போகாதீங்க...!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை
Ration shop|ரேஷன் கடை
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது 34,916 நியாயவிலைக் கடைகள் (சுமார் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள்) வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு மற்றும் பொது விநியோகத் திட்டக் கடைகளின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration Card Holders) ஒவ்வொரு மாதமும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் வசதிக்காகத் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ. 100-க்கு 10 வகை காய்கறிகள் மற்றும் ரூ. 200-க்கு 10 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம். இதற்கு வசதியாக சிறப்பு ரெயில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, மறுநாள் அதாவது நவம்பர் 9-ம்தேதி திங்கட்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ரேஷன் கடைகள்
ரேஷன் கடைகள்AI Image

அதாவது, தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு மறுநாளான திங்கட்கிழமையும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கும் வரும் நவம்பர் 9-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நாளுக்கு பதிலாக, ஏற்கனவே விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நவம்பர் 21-ம் தேதி அன்று, ரேஷன் கடை பணியாளர்களுக்குப் பணி நாளாக மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்:

விடுமுறை நாள்: நவம்பர் 9, 2026 (திங்கட்கிழமை) - தீபாவளிக்கு மறுநாள்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகள் விற்பனை: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
ரேஷன் கடை

மாற்றுப் பணி நாள்: இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக, நவம்பர் 21-ம்தேதி (சனிக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் (பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது).

காரணம்: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விடுமுறை அளிக்கப்ப்ட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 8-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த நாளான 9-ம் தேதியை விடுமுறை நாளாக, அதாவது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட 21.11.2026 தேதிக்கு மாற்றாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

இதையும் படியுங்கள்:
​ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா?
ரேஷன் கடை

அந்த கோரிக்கையை ஏற்று, வரும் 9-ம் தேதியை விடுமுறை நாளாகவும், 21-ம் தேதியை பணி நாளாகவும் அறிவித்து உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.