​ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா?

உளுந்து முதல் சீரகம் வரை 10 அத்தியாவசிய பொருட்கள் ஒரே பையில் வழங்கும் அரசு.
சிறப்பு மளிகைத் தொகுப்பு
Grocery
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் சராசரியாக 20%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டனர். ரூ.1,300-க்கு விற்பனையான ஒரு மூட்டை அரிசி இப்போது ரூ.1,800-க்கு விற்பனையாகிறது.

தீபாவளி பண்டிகை வரவிருக்கும் இந்த நேரத்தில், விலைவாசி உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி விடும். இந்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு அங்காடிகளில் 10 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பை வெறும் 200 ரூபாய்க்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மளிகைத் தொகுப்பு நாளை (அக்டோபர் 30) முதல் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும்.

தீபாவளி பண்டிகை காலத்தில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், பொதுமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

10 பொருட்களின் மளிகைத் தொகுப்பு:

1. கடலை பருப்பு

2. பாசிப் பருப்பு

3. உளுந்தம்பருப்பு

4. மிளகாய்

5. தனியா

6. பூண்டு

7. புளி

8. கடுகு

9. சீரகம்

10. சோம்பு

வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பபட இருக்கிறது. பண்டிகை நெருங்கும் நிலையில், சிறப்பு மளிகைத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருப்பது சென்னை வாழ் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும்.

காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் அதிகமாக உள்ளது. இதனால் சென்னை வாழ் மக்களின் சமையல் செலவுகள் வழக்கத்தை விட அதிகமாகியுள்ளன.

அறுவடை குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் மளிகைத் தொகுப்பை வழங்கவுள்ளது தமிழக அரசு.

மளிகைத் தொகுப்பு
Grocery
இதையும் படியுங்கள்:
அப்பாடா... இன்னைக்கு எந்த ஷாக்கும் இல்ல! நிம்மதி தரும் தங்கம்.. சரிந்தது வெள்ளி விலை!
சிறப்பு மளிகைத் தொகுப்பு

வெளிச் சந்தையில் இந்த 10 மளிகைப் பொருட்களின் மொத்த மதிப்பு, ரூ.200-ஐ விட அதிகமாக இருக்கும் என்பதால், பண்டிகை கால செலவைக் குறைக்க மானிய விலை மளிகைத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடியும் வரை கையிருப்பைப் பொறுத்து, மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். ஆகையால் பொதுமக்கள் முன்கூட்டியே மளிகைத் தொகுப்பை வாங்குவது நல்லது. ​

மளிகைத் தொகுப்பு கிடைக்கும் இடங்கள்:

* கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள்

* கூட்டுறவு விற்பனை மையங்கள்

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

முதல்கட்டமாக சென்னையில் நாளை தொடங்கப்படுவதால், சென்னை வாழ் மக்கள் கூட்டுறவு அங்காடிகளில் நேரடியாக சென்று பணத்தைக் கொடுத்து மளிகைத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வங்கியில FD போடுறீங்களா? இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!
சிறப்பு மளிகைத் தொகுப்பு

ரேஷன் கார்டு அவசியமா?

ஒரு நபருக்கு ஒரு மளிகைத் தொகுப்பு என்ற அடிப்படையில், இருப்பு இருக்கும் வரை விநியோகிக்கப்படும். சிறப்பு மளிகைத் தொகுப்பை வாங்க ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கேட்கப்படாது.

இருப்பினும் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒருவரே இருமுறை வாங்குவதைத் தவிர்க்க ரேஷன் கார்டு கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை கொண்டு எடுத்துச் செல்வது நல்லது

logo
Kalki Online
kalkionline.com