வங்கியில் பணம் வைத்திருப்போர் கவனத்திற்கு..! ரூ.5,000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது! RBI உத்தரவு.!

புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கிக்கு ஆர்பிஐ கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே பணம் பெற முடியும்.
புதுச்சேரி கூட்டுறவு வங்கி
புதுச்சேரி கூட்டுறவு வங்கிAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

வங்கிக் கணக்கில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கியில் பணம் சேமித்து வைத்திருப்பவர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக ஏடிஎம் (ATM), மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் அல்லது வங்கி கிளைகளுக்கு நேரடியாகச் சென்று தங்களின் பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என நம்புகின்றனர். இதுவே வங்கி கணக்கு வைப்பதன் முக்கிய நோக்கமும் பாதுகாப்பும் ஆகும்.

ஆனால், வங்கியின் நிதிநிலையில் சிக்கல் ஏற்படும்போது, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக, வங்கியில் அதிகத் தொகையைச் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் கவலையை ஏற்படுத்தக்கூடும்.

பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் பணம் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்றும், அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு வங்கியின் நிதிநிலை மோசமடையும் போது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்த வங்கியின் மீது 'மொரட்டோரியம்' (Moratorium) எனப்படும் தடையை விதித்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வரம்புகளை (Withdrawal Limits) நிர்ணயிக்க முடியும்.

வங்கியின் நிதி நிலைமை மோசமாக இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே (உதாரணமாக ரூ.10,000, ரூ.25,000 அல்லது ரூ.50,000) எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதிக்கும். (கடந்த காலங்களில் Yes Bank, PMC Bank, Lakshmi Vilas Bank போன்ற வங்கிகளில் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன).

இந்நிலையில் தான், புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பணப்புழக்கக் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கிக்கு (Puducherry Co-operative Urban Bank Ltd) இந்திய ரிசர்வ் வங்கி புதிய செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவு 2026 அக்டோபர் 21 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கியின் நிதிநிலை தொடர்பான கவலைகளையும், வைப்புத்தொகையாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், புதிய கடன்கள் வழங்குதல், ஏற்கனவே வழங்கப்பட்ட கடன்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வங்கியின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆர்பிஐ
ஆர்பிஐ

இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட காலத்துக்கு அமலில் இருக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் தற்போதைய நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவின் முக்கிய அம்சங்கள் இதோ:

* வங்கியின் சேமிப்புக் கணக்கு (Savings Account), நடப்புக் கணக்கு (Current Account) அல்லது பிற கணக்குகளை வைத்துள்ள வைப்பாளர்கள் (Depositors) தங்கள் கணக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.5,000 வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர்.

* ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, வங்கி புதிய கடன்களை வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ கூடாது; எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது; புதிய வைப்புத்தொகைகளை (Deposits) ஏற்கக் கூடாது.

* இந்தக் கட்டுப்பாடுகள் அக்டோபர் 21, 2026 முதல் 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், வங்கியின் நிதிநிலை மற்றும் ஆய்வு முடிவுகளைப் பொறுத்து ஆர்பிஐ அவற்றை பின்னர் மறுபரிசீலனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வங்கி லாக்கர் பாதுகாப்பானது தானா? உங்கள் நகைகள் திருடுபோனால் முழுப் பணம் கிடைக்குமா?ஆர்பிஐ விதிகள்!
புதுச்சேரி கூட்டுறவு வங்கி

* தகுதியுள்ள வைப்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகைக்கு, வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) மூலமாக அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற உரிமை உடையவர்கள் ஆவர்.

முக்கியமாக இந்த உத்தரவானது வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதற்காக விதிக்கப்பட்டது அல்ல என்றும், வங்கியின் நிதி நிலைமை சீராகும் வரை இந்தக் கட்டுப்பாடுகளுடன் வங்கி தொடர்ந்து செயல்படும் என்றும் Official Website of Reserve Bank of India வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள், தங்களது வைப்புத்தொகையின் நிலை மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு விதிகள் குறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவது கொள்வது நல்லது.

மேலும்இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு வங்கியில் மட்டும் அனைத்துப் பணத்தையும் சேமித்து வைப்பதை விட, 2 அல்லது 3 வங்கிகளில் பிரித்து வைப்பது பல வழிகளில் நமக்கு பாதுகாப்பைத் தரும்.

இதையும் படியுங்கள்:
8.05% வட்டியுடன் ஆர்பிஐ பாண்ட்: உங்கள் பணத்திற்கு 100% அரசு கேரண்டி!
புதுச்சேரி கூட்டுறவு வங்கி

அதேசமயம் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் போது, ஒவ்வொரு வங்கியிலும் கேட்கப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance) பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க, ஜீரோ பேலன்ஸ் (Zero Balance) கணக்குகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com