தவறான நம்பருக்கு ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்... பணத்தை திரும்ப பெறலாம்..!

தவறான எண்ணுக்குப் பணம் அனுப்புவது போன்ற தவறுகள் யாருக்கும் நடக்கலாம், ஆனால் விரைவான நடவடிக்கை உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
recharge the wrong number
recharge the wrong number
Updated on

நீங்கள் அவசரத்தில் உங்கள் மொபைலையோ அல்லது வேறொருவரின் மொபைலையோ ரீசார்ஜ் செய்ய முயற்சிக்கும்போது, ​​தவறுதலாக அந்த ரீசார்ஜ் ஒரு அறிமுகமில்லாத நபரின் எண்ணுக்குச் சென்றுவிடுகிறது.

உடனே உங்களுக்குப் பதட்டம் ஏற்பட்டு, தவறுதலாக வேறு மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டோமே? என்று பீதியடைய வேண்டாம். உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும்.

தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டால், உடனடியாக உங்கள் தொலைபேசி நிறுவனத்தின் (Jio, Airtel, Vi) வாடிக்கையாளர் சேவைக்கு (Customer Care) அழைத்து, பரிவர்த்தனை ஐடி (Transaction ID), தவறான எண் மற்றும் ரீசார்ஜ் விவரங்களைக் கூறி புகார் அளிக்கவும்.

கடையில் ரீசார்ஜ் செய்திருந்தால், உடனே கடையை அணுகி, அவர்கள் மூலம் ஆபரேட்டரின் விநியோகஸ்தரை (Distributor) தொடர்புகொண்டு சரிசெய்ய முடியுமா என்று பார்க்கவும்.

ரீசார்ஜ் செய்யும் போது ஏற்படும் சிறிய தவறுகளால் பலர் பணத்தை இழக்கிறார்கள், ஆனால் அந்தப் பரிவர்த்தனையைத் திரும்பப் பெற ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். அதேசமயம், நீங்கள் விரைவாக (3 மணி நேரத்திற்குள்) செயல்பட்டு, சில விதிமுறைகளை பயன்படுத்தினால் மட்டுமே, உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி அஞ்சல் நிலையத்திலும் ரீசார்ஜ் செய்யலாம்..!
recharge the wrong number

MyJio செயலியைப் பயன்படுத்தி தவறான ரீசார்ஜை ரத்து செய்வதற்கும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் கோருவதற்கும் ஒரு எளிய மற்றும் விரைவான முறையை பற்றி அறிந்து கொள்ளலாம்.

MyJio ஆப் உள்ளே சென்று Recharge history என்று டைப் செய்து உள்ளே சென்றால் நீங்கள் தவறாக ரீசார்ஜ் செய்தை காட்டும். அதை செலக்ட் செய்து, cancel planஐ கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து ஏன் cancel செய்கிறோம் என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதில் cancel செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றை தேர்வு செய்ய(Why do you want to cancel?) வேண்டும்.

அடுத்து ரீபண்டுக்கான போமெண்ட் மோடு ஆப்ஷன் என்ன(Reversal in the original mode of payment) என்பதையும் செலக்ட் செய்து cancel plan என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான். ரீசார்ஜ் plan ரத்தாகி உங்களது பணமும் திரும்ப கிடைத்து விடும்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. அதாவது நீங்க தவறாக ரீசார்ஜ் செய்து 3 மணிநேரத்திற்குள் இதை கேன்சல் செய்தால் மட்டுமே இது வேலை செய்யும். உங்களது பணமும் திரும்ப கிடைக்கும்.

மற்றொரு முக்கியமான விஷயம் நீங்க ரீசார்ஜ் செய்த பிளானில் இருந்து எந்த விதமான பலன்களையும் நீங்கள் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் பயன்படுத்தி இருந்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்காது.

ஒருமுறை மொபைல் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தால், அதை பொதுவாக ரத்து செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. ஏனெனில், அந்தத் தொகை உடனடியாக ஆப்பரேட்டரின் கணினியில் வரவு வைக்கப்பட்டு, ரீசார்ஜ் செய்யப்பட்ட எண்ணுக்குப் பயன்படுத்தப்படுகிறது.நீங்கள் தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்திருந்தால், சாத்தியமான திருத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, உங்கள் ஆப்பரேட்டரிடமோ அல்லது ரீசார்ஜ்தளத்திடமோ (பேடிஎம் போன்றவை) புகார் அளிப்பதே உங்களுக்கான முதன்மை வழியாகும்.

இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்க “பணம் செலுத்து” என்பதைத் தட்டுவதற்கு முன், நீங்கள் ரீசார்ஜ் செய்யும் மொபைல் எண்ணை எப்போதும் இருமுறை சரிபார்க்கவும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
recharge the wrong number

தவறான எண்ணுக்குப் பணம் அனுப்புவது போன்ற தவறுகள் யாருக்கும் நடக்கலாம், ஆனால் விரைவான நடவடிக்கை உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பணம் திரும்பக் கிடைப்பது எப்போதும் உறுதியளிக்கப்படாவிட்டாலும், உடனடியாக வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதும், முறையான புகாரை அளிப்பதும் பெரும்பாலும் உதவக்கூடும் என்பதை மறக்க வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com