இணையத்தில் வைரலாகும் Zip Coding Relationship’: ஜென்-Z இளைஞர்கள் மத்தியில் பெருகும் புதிய டேட்டிங் மோகம்!

ஜென் Z-க்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுடைய தேவைகளை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கொள்வதை போன்றே வாழ்க்கை துணையையும் ஆன்லைனிலேயே தேட ஆரம்பித்து விட்டார்கள்.
Zip Coding Relationship
Zip Coding Relationship
Published on

இன்றைக்கு இருக்கும் டிஜிட்டல் யூகத்தில் உறவுமுறைகள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பொதுவாக 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களை ஜென் Z தலைமுறையினர் என்று சொல்வார்கள். இந்தியாவின் இளம் தலைமுறையான ஜென் Z, மக்கள் தொகையில் 28-30 சதவீதம் பங்கு விகிக்கின்றனர். அதிலும் ஜென் Z தலைமுறையினர் உறவுமுறைகளுக்கு புதிய வார்த்தைகள் கொண்டு வருகிறார்கள். அப்படி தான் தற்போது ‘Zip Coding Relationship’ என்ற வார்த்தை டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ‘Zip Coding Relationship’ என்றால் என்ன? அந்த வார்த்தை எதை வெளிப்படுத்துகிறது, Zip Coding உறவுமுறையை ஏன் ஜென் Z தலைமுறையினர் தேர்வு செய்கிறார்கள், Zip Coding உறவுமுறை நல்லதா, கொட்டதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..

முன்பெல்லாம் டேட்டிங் கலாச்சாரம் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக இருந்தது. ஆனால் நாளடைவில் இந்த கலாச்சாரம் படிப்படியாக இந்தியாவிலும் பரவத்தொடங்கியதுடன் சமீப காலமாக ஜென் Z தலைமுறையினரிடம் இந்த கலாச்சாரம் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது.

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டே வரும் அதேவேளையில் ஆன்லைன் டேட்டிங்கும் நாளுக்குநாள் உலகினுடைய ஒவ்வொரு மூலையிலும் பரவிக்கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டேட்டிங் செல்லும்போது இம்ப்ரஸ் செய்யவேண்டிய விஷயங்கள்...நோட் பண்ணிக்கோங்க!
Zip Coding Relationship

ஜென் Z தலைமுறையினர் தற்போது இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுடைய தேவைகளை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கொள்வதை போன்றே வாழ்க்கை துணையையும் ஆன்லைனிலேயே தேட ஆரம்பித்து விட்டார்கள். அதற்காக அவர்களுடைய சுயவிவரங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறார்கள்.

ஆன்லைன் டேட்டிங்கில் பல சிக்கல்களும், அதிகளவில் ஏமாற்றுவதற்காக வாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. ஏற்கனவே, இஞைர்கள் மத்தியில் Tinder, okcupid, Jaumo, Bumble என்ற ஆன்லைன் செயலிகள் பிரபலமாகிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தற்போது இணைந்துள்ள Zip coding என்ற ஆப் சமீப காலமாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

'ஜிப் கோடிங்' (Zip Coding) என்பது ஒருவர் வசிக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு டேட்டிங் செய்யத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் செயலாகும். அதாவது 'ஜிப் கோடிங்' உறவுமுறை என்பது GenZ-க்கள் தங்களுக்கு மிக அருகில் (அக்கம் பக்கத்தில்) இருப்பவர்களைத் தேடி காதலிக்கும் அல்லது டேட்டிங் செய்யும் புதிய ட்ரெண்டாகும். போக்குவரத்து நெரிசல், நேரமின்மை, மற்றும் உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நடைமுறை வசதிக்காகவே இந்த உறவுகளை அவர்கள் தேர்வு செய்கின்றனர். டேட்டிங் செயலிகளில் இருப்பிட வரம்பை (Radius filter) மிகக் அருகில் இருப்பர்களை வைத்து, தங்களுக்கு அருகிலுள்ள நபர்களை மட்டும் இவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

சுருக்கமாக, GenZ-க்கள் காதலில் ‘குவாலிட்டி’ (Quality) மற்றும் ‘கன்வீனியன்ஸ்’ (Convenience) இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த 'Zip Coding' கலாச்சாரத்தை நோக்கிச் செல்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்து நேரத்தை செலவிட வசதியான ஒன்றாக மாறி உள்ளது.

ஆனால் தற்போது நேரத்தை செலவிட பக்கத்தில் இருப்பவர்களை தேர்வு செய்வது தான் இன்றைய கலாச்சாரமாக மாற்றி வருகின்றனர் இன்றைய GenZ-க்கள். இதனை தான் தற்போதை ஜென் Z தலைமுறையினர் Zip Coding உறவுமுறை என்று சொல்கின்றனர்.

Zip Coding உறவுமுறை எதை வெளிப்படுத்துகிறது என்றால், ஆன்லைனில் உங்கள் ஜோடியை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பு அவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்துதான் ஜென் Z தலைமுறையினர் துணையை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பிடித்தவரைக்கும் கூட இருந்து நேரத்தை செலவிட்டு விட்டு, வேறு இடத்திற்கு மாறும்போது மறுபடியும் நான் ஒரு சிங்கிள் என்று ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்கிறார்கள். அதாவது தற்போதுள்ள ஜென் Z தலைமுறையினர் ஒரு உறவு சுற்றுலா போன்று இருப்பதற்கு தான் விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது temporary relationship with in the zone என்றும் சொல்லலாம்.

இருவரும் ஒரே பகுதியில் இருந்தால் அதிகநேரம் பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை, நேரில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் நேரமும் அதிகமாக இருக்கும் என்பது போன்ற காரணங்களால் தான் இந்த Zip Coding உறவுமுறை சிறந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் அந்த நபரை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே தான் இந்த Zip line Coding மூலமாக துணையை தேர்வு செய்வது வசதியாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பூங்காவில் ‘டேட்டிங்’ செய்ய ஆன்லைன் முன்பதிவு- சர்ச்சையில் சிக்கிய ‘புக் மை ஷோ’..!
Zip Coding Relationship

அதேநேரம் நவீன டேட்டிங் கலாச்சாரத்தில் Zip Coding உறவுமுறை என்பது அதன் அடுத்த படி. ஒரு பின்குறியீட்டை வைத்து நமக்கு ஏற்ற சரியான ஒரு இணையை நம்மால் கணிக்க முடியாது என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

Zip Coding உறவுமுறை நல்லதா, கெட்டதா என்று கேட்டால், டேட்டிங் செயலியில் அர்ப்பணிப்புக்கு இடம் கிடையாது. டேட்டிங் என்பது ஒருவருக்கெருவர் நேரத்தை செலவிடுவதை பற்றியது மட்டும் தான்.

இருவரும் எப்போது ஒன்றாக இருக்க வேண்டும், எப்போது பிரிந்து போக வேண்டும் என்பதற்கு இதில் எந்தவித வரைமுறையும் இல்லை. அதேபோல் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கும் இங்கு இடமில்லை.

Zip Coding உறவுமுறை என்பது ஒரு வசதியான விருப்பம் ஆனால் நிலையற்ற உறவுமுறையாகும். நீங்கள் ஒரு நம்பிக்கையான, உறுதியான, அர்த்தமுள்ள உறவுமுறையை தேடுவதாக இருந்தால் Zip Coding உறவுமுறை உங்களுக்கு சரியான தேர்வாக இருக்காது. Zip Coding மட்டுமல்ல எந்த டேட்டிங் செயலியும் ஒரு நல்ல துணையை தேடுவதற்கு சரியான தேர்வாக இருக்காது.

அதேநேரம் நீங்கள் உணர்ச்சி ரீதியாக மட்டும் நெருக்கமாக இருக்க விரும்பினால் Zip Coding உறவுமுறையில் உங்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் கொடுக்கும் என்பதையும் மறக்க வேண்டாம். Zip Coding உறவுமுறை முற்றிலும் நல்லது என்று சொல்லவும் முடியாது, அதேநேரம் கெட்டது என்று வரையறுக்கவும் முடியாது.

மனஅழுத்தத்தில் இருக்கும் போது யார் உடனாவது பேசி பழக வேண்டும், நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு வேண்டுமானால் Zip Coding உறவுமுறை பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் உறுதியான பிணைப்பையே, நம்பிக்கையான துணையையோ தேடுபவர்களுக்கு Zip Coding உறவுமுறை சரியான தேர்வாக இருக்காது என்று மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
கோர்ட் அதிரடி தீர்ப்பு..! இனி ‘லிவ்-இன் உறவு சட்டவிரோதமானது அல்ல’..!
Zip Coding Relationship

அதனால் தற்போது இந்தியாவில் டிரெண்டாகிக்கொண்டிருக்கும் Zip Coding உறவுமுறையில் உங்களுடைய துணையை தேர்வு செய்வது அவசியமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது என்று மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். அதனால் Zip Coding உறவுமுறையில் துணையை தேர்வு செய்ய ஒரு தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர ஒப்புதல் போன்றவை மிகவும் அவசியம் என்றும் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com