அரிசி விலை எப்போது குறையும்? வியாபாரிகள் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் அரிசி விலை எப்போது குறையும் என்பது குறித்து அரிசி வியாபாரிகள் சங்கத்தினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அரிசி விலை
அரிசி விலை
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பங்குச்சந்தைப் புள்ளிகளில் இல்லை; சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் உணவில் இருக்கிறது. சத்தமே இல்லாமல் மாதந்தோறும் அரிசி விலை உயர்ந்து வருவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர வரவு - செலவு கணக்கை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.

இதற்கிடையே அரிசி விலை ஜனவரி 2027 முதல் குறைய வாய்ப்புள்ளது என்று அரிசி வியாபாரிகள் மற்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரிசி விலை உயா்வானது கடந்த நான்கு மாதங்களில் (ஜூலை முதல் அக்டோபர் வரை) 26 கிலோ கொண்ட சன்னரக அரிசி மூட்டைக்கு ரூ. 800 வரையும் , மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையும் அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் ஒரு மூட்டை சன்னரக அரிசி ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இது ஆகஸ்டில் ரூ.1,750-வும், செப்டம்பரில் ரூ.1,900 ஆகவும் உயா்ந்து அக்டோபரில் ரூ.2,200- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் ஒரு மூட்டை மோட்டா ரக அரிசியின் விலை ஜூலையில் ரூ.1,200 ஆகவும், ஆகஸ்டில் ரூ.1,400 ஆகவும், செப்டம்பரில் ரூ.1.600 ஆகவும் உயா்ந்து தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது கடந்த ஜூலை மாதம் ரூ.1600க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சன்னரக அரிசி ரூ.800 வரை உயர்ந்து தற்போது ரூ.2400க்கும், ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்ட மோட்டா ரச அரிசி ரூ.600 வரை உயர்ந்து தற்போது ரூ.1800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையுடன் சேர்ந்து அரிசி விலையும் உயர்ந்து வருவது, நடுத்தர வருவாய்க் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் உயா்ந்துள்ளன. தென்னிந்திய, குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களின் அன்றாட உணவில் அரிசி முதன்மையாக இருப்பதால், இந்த விலை உயர்வு குடும்பச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கிறது.

விலை உயா்வால் தமிழகத்தில் அரிசி விற்பனை சரிந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ரேஷன் அரிசியை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். விலை உயா்வால் 26 கிலோ அரிசி மூட்டை வாங்கியவா்கள் தற்போது 10 கிலோ மட்டுமே வாங்க தொடங்கி உள்ளனர்.

அரிசி விலை
Rice Price

தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், பச்சரிசி கிலோ ரூ 46-க்கும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் 100 லாரிகளில் நெல் மூட்டைகள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த வரத்து பாதியாகக் குறைந்தது மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால் நெல் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டதும் அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம். மேலும் எல்நினோ தாக்கம் மற்றும் சாகுபடி குறைவு, கூலி உயர்வு மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பு மற்றும் எத்தனால் உற்பத்திக்கான தேவை அதிகரிப்பு போன்றவை அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களின் அரிசி தேவையில் பெரும்பகுதியை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பூர்த்தி செய்கின்றன. கடந்த ஆண்டு வட மாநிலங்கள், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் நெல் விளைச்சல் பாதியாக சரிந்தது. இதனால் அரிசியின் தேவை அதிகரித்து விலை ஏற்றம் கண்டது.

இதையும் படியுங்கள்:
குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!அதிரடியாக குறையப் போகும் அரிசி விலை.! எவ்வளவு தெரியுமா.?
அரிசி விலை

அதேபோல் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரவில்லை.

மேலும் பருவமழையும் போதிய அளவு பெய்யாததால் குறுவைக்காக பயிரிடப்பட்டிருந்த 2 லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பைச் சந்தித்து மகசூல் பாதியாக குறைந்தது.

இதற்கிடையே புதிய நெல் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், வரவிருக்கும் ஜனவரி மாதத்தில் (2027) அரிசி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நெல் அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் சம்பா பருவ நெல் அறுவடை சந்தைக்கு வரத் தொடங்குவதால் விலை சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அரிசி கிலோ ரூ.80, எண்ணெய் லிட்டருக்கு ரூ.40 உயர்வு! விண்ணை தொடும் அத்தியாவசிய பொருட்களின் விலை!
அரிசி விலை

இதனிடையே, தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில், நெல், அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.