டிகிரி முடித்தவரா நீங்கள்? இந்திய ரெயில்வேயில் வேலை..! சம்பளம் - ரூ.44,900..! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 191 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
Railway Job|ரயில்வே வேலை
Railway Job|ரயில்வே வேலைAI Image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

ரெயில்வேயில் வேலை பெற வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு பிரிவுகளில் உள்ள 191 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்ட உதவியாளர், அரசு வழக்கறிஞர், மூத்த விளம்பர ஆய்வாளர், இந்தி இளநிலை மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட ஏழு வகையான பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வேயில் (RRB) அறிவிக்கப்பட்டுள்ள 191 தனிமைப்படுத்தப்பட்ட (Isolated Categories) காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் https://rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே வேலைவாய்ப்பு - பணியிட விவரங்கள்:

மொத்த காலிப் பணியிடங்கள்: 191

பதவிகள்: ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (Hindi), சீஃப் லா அசிஸ்டென்ட், பப்ளிக் பிரசிகியூட்டர் மற்றும் பிற தொழில்நுட்பப் பதவிகள்.

காலியிட விவரங்கள் :

தலைமை சட்ட உதவியாளர் (Chief Law Assistant): 17 பணியிடங்கள்

அரசு வழக்கறிஞர் (Public Prosecutor): 21 பதவிகள்

மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior Publicity Inspector): 8 பணியிடங்கள்

இளநிலை மொழிபெயர்ப்பாளர்/இந்தி (Junior Translator/Hindi): 79 பணியிடங்கள்

பணியாளர் மற்றும் நல ஆய்வாளர் (Staff and Welfare Inspector): 27 பணியிடங்கள்

அறிவியல் உதவியாளர் (பயிற்சி) (Scientific Assistant Training): 3 பணியிடங்கள்

ஆய்வக உதவியாளர் மூன்றாம் நிலை (வேதியியலாளர் மற்றும் உலோகவியலாளர்) (Lab Assistant Grade III - Chemist and Metallurgist): 36 பணியிடங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 4 (4/12/2026)

ரயில்வே வேலைவாய்ப்பு
ரயில்வே வேலைவாய்ப்பு

விண்ணப்பத்தை திருத்தம் செய்ய (Modification Window): டிசம்பர் 7 முதல் டிசம்பர் 16 வரை.

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: டிசம்பர் 6

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்தலாம். வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்த அனுமதி இல்லை.

தேர்வு கட்டணம்: அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.

பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் (PwBD), பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (EBC) ரூ.250 தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு எழுதிய பிறகு இவர்களுக்கு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
டிகிரி இருந்தா போதும்... மாதம் ரூ.35,400 சம்பளத்தில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலை..!!
Railway Job|ரயில்வே வேலை

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் அல்லது சட்டப்படிப்பு (Law Degree). இறுதித் தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 22 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: https://www.rrbapply.gov.in/

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மட்டும் கூடுதலாக மொழிபெயர்ப்புத் தேர்வு நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்: ரெயில்வே துறையில் 3,477 பணியிடங்கள் அறிவிப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!
Railway Job|ரயில்வே வேலை

விண்ணப்பத்தாரர்கள் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான அறிவிப்பைப் பார்த்து, பணிவாரியான தகுதிகள் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.