ரஷ்யா டூ இந்தியா நேரடி ரயில் பாதை: உலக அரசியலை மாற்றப் போகும் மெகா திட்டம்!

ஹார்மூஸ் ஜலசந்தி முடங்கியதால் ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு; இந்தியாவுக்கு என்ன பயன்?
சர்வதேச ரயில் சேவை
Russia - India
Updated on

அமெரிக்கா, ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இடையே கப்பல் போக்குவரத்து தான் பிரதானமாக இருந்து வருகிறது. உலகளாவிய போர் பதற்றங்கள் காரணமாக கப்பல் வழி போக்குவரத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க முயற்சித்து வரும் ரஷ்யா, இந்தியாவுக்கு நேரடி ரயில் வழிப் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதன் காரணமாக அவ்வழியே உலக நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதனால் கடந்த 2 மாதங்களாக இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் கால சட்டத்திற்கு குட் பை.. நீதிமன்றத்தில் இனி வங்கியின் டிஜிட்டல் ஆவணங்கள் செல்லும்.!
சர்வதேச ரயில் சேவை

கப்பல் வழிப் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவே தற்போது ரயில் போக்குவரத்தை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. ஆனால் இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், ரஷ்யா முன்மொழிந்த ரயில் பாதையானது பாகிஸ்தானை கடந்து வர வேண்டும்.

ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் இருப்பதால், இந்த ரயில் போக்குவரத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் வழங்குமா என்பது சந்தேகம் தான்.

மத்திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக ரயில் போக்குவரத்தை அமைக்க ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா துணைப் பிரதமர் மராட் குஸ்னுலின் கூறுகையில், “சர்வதேச கடல் வழிப் பாதைகளில், வருங்காலத்திலும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படும். இதனைத் தவிர்க்க மாற்றுப் பாதை அவசியம். இது தரைவழிப் பாதையாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆகையால் தான் ரயில் போக்குவரத்தைத் தேர்வு செய்துள்ளோம்.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாகவோ அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாகவோ, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவை இணைக்கும் பல்வேறு மாதிரி ரயில் வழித் தடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்தியாவுக்கு நேரடி வர்த்தக அணுகலை வழங்குவதற்கு, எந்தவொரு வழிமுறையையும் ரஷ்யா ஏற்க தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

வர்த்தக ரயில் போக்குவரத்து
Russia - India
இதையும் படியுங்கள்:
உலக வரைபடத்தில் ஓசூரை முன்னிறுத்தும் பசுமை ஏர்போர்ட்! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
சர்வதேச ரயில் சேவை

சர்வதேச அளவில் வடக்கு - தெற்கு போக்குவரத்து மண்டலத்தை விரிவுபடுத்தும் திட்டமாக ரஷ்யாவின் முயற்சி பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான சரக்கு மற்றும் எரிசக்தி விநியோக சங்கிலி இத்திட்டத்தின் மூலம் மேலும் வலுப்பெறும்.

அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு முன்பாக, இந்தியா ரஷ்யாவிடம் தான் சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்த காலத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கிக் கொள்ள அமெரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வர்த்தக உறவைப் பலப்படுத்தவே ரயில் போக்குவரத்து திட்டத்தை முன்மொழிந்துள்ளது ரஷ்யா.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக உறவை முறிப்பதற்காகவே, இந்தியாவின் இறக்குமதி வரியை அதிகப்படுத்தியது அமெரிக்கா.

மேலும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அப்படி இருக்கும் போது ரஷ்யா - இந்தியா இடையேயான ரயில் போக்குவரத்தைத் தடுக்க அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முழுமுயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com