சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக... 24 மணி நேர உதவி எண்கள் வெளியீடு..!

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை, களியக்காவிளை மற்றும் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
sabarimalai ayyapan temple|சபரிமலை பக்தர்கள்
sabarimala|சபரிமலை பக்தர்கள்
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சபரிமலை யாத்திரை செல்லும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேர தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 17.11.2026 முதல் 20.01.2027 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16-ம்தேதி திறக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களுக்காகச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணத்திற்கு உதவும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் மண்டல பூஜை விழா 17.11.2026 முதல் 27.12.2026 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2026 முதல் 19.01.2027 வரையும் நடைபெற உள்ளது.

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.1.2027 வரை செயல்படும். பக்தர்கள் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

சபரிமலை பக்தர்கள் தொடர்பு எண்கள்:

சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தை 98944 33179, 87606 68834, 94862 70443 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை தகவல் மையம் (சுழற்சி முறை அலுவலர்கள்) :

சபரிமலை தகவல் மையத்தில், 17.11.2026 முதல் 02.12.2026 வரை: பிரேம்குமார் – 63858 06900, லால்கிருஷ்ணன் – 70949 06442

03.12.2026 முதல் 17.12.2026 வரை: சிவக்குமார் – 94439 94342, சதீஷ்குமார் – 73588 39969, சேர்மராஜா – 83440 21828

18.12.2026 முதல் 02.01.2027 வரை: செந்தில் குமார் – 70105 49951, சஜீவன் – 99405 76898, சந்தீப் குமார் – 85310 70571

Iyappa Devotees
Sabarimalai

03.01.2027 முதல் 20.01.2027 வரை: வெங்கடேஷ் – 98433 70229, ரமேஷ் – 84384 44770, சுதாகர் – 99425 05466 ஆகியோரை தொடர்பு கொண்டு பக்தர்கள் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இத்தகவல் மையங்களின் சேவையை தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவிற்காக சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலுார், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, கேரள மாநிலம் பம்பைக்கு சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ‘ஏசி’ மற்றும் ’ஏசி’ அல்லாத பஸ்கள், படுக்கை வசதி என, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணியர் www.tns tc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு, வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
sabarimalai ayyapan temple|சபரிமலை பக்தர்கள்

பஸ்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களுக்கு, 94450 14446, 94450 14424 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்கு, சிறப்பு வார ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – கொல்லம் ரெயில், ஜனவரி 21 வரை வியாழன்தோறும் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே, மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை, 4:30 மணிக்கு கொல்லத்தை அடையும்.

இதையும் படியுங்கள்:
சபரிமலை தரிசனம் இனி ரொம்ப ஈஸி! தரிசன முன்பதிவுக்கு 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம்..!!
sabarimalai ayyapan temple|சபரிமலை பக்தர்கள்

மறுமார்க்க ரெயில் இன்று (நவம்பர் 20) முதல், ஜனவரி 22 வரை, வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6:45க்கு கொல்லத்தில் இருந்து கிளம்பி, அடுத்தநாள் (சனிக்கிழமை) மதியம், 12:30க்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும். இத்தகவலை, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.