ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.42,524 வட்டி! அசத்தும் FD திட்டம் - முழு விபரம் உள்ளே..!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்...
FD Interest Rate
Fixed Deposit
Updated on

ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit - FD) என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குநிலையான வட்டி விகிதத்துடன் பணத்தை முதலீடு செய்யும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். இது சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி வழங்குகிறது மற்றும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. இது சந்தை அபாயங்கள் இல்லாத உறுதியான வருமானம் தரும் பாதுகாப்பான முதலீடாகும். ஃபிக்சட் டெபாசிட்டில் பணம் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்பு என்றாலே, பெரும்பாலானோர் முதலில் பார்ப்பது பாதுகாப்பை தான். அந்த வகையில் மக்களின் மத்தியில் அதிகளவும் நம்பிகையை பெற்றுள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்திற்கு 3.05% முதல் 6.45% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
SBI வாடிக்கையாளர்களே மறக்காதீங்க! ஜன.15-க்குள் இதை செய்யலைனா உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்..!
FD Interest Rate

அந்த வகையில், பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாமல், உத்தரவாதமான அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இன்று ரூ.1 லட்சத்தை 5 வருடங்களுக்கு டெபாசிட் செய்தால் அதன் மூலம் ரூ.42,524 வலுவான ரிட்டர்ன் தரும் FD திட்டம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் நடுத்தர மற்றும் ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஏனெனில் தற்போது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர் கையில் ரூ.1 லட்சம் வைத்திருக்கும் பட்சத்தில் அதைக்கொண்டு ஒரு சவரன் தங்க நகை வாங்க முடியாது. ஏனெனில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்க்கும் போது மொத்தமாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டி விடும்.

எனவே குறைந்த முதலீடு உள்ளவர்கள் SBI வங்கியில் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் நிலையான வட்டியை பெற முடியும்.

அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், மிகவும் குறைந்த ஆண்டுகளை விட 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகின்றன.

குறிப்பாக SBI வங்கி மூத்த குடிமக்களுக்கு அதன் 444 நாள் அம்ரித் வர்ஷி சிறப்பு FD திட்டத்தில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது, SBI வங்கி அம்ரித் வர்ஷி சிறப்பு FD திட்டத்தில் கீழ், பொது குடிமக்களுக்கு 6.45 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.95 சதவீதமும் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு 7.05 சதவீதமும் என்ற அடிப்படையில் அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 5 ஆண்டு FD திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.05 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.05 சதவீதமும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு 7.15 சதவீதமும் வழங்குகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமாகும்.

இந்த திட்டத்தில் சேர்ந்தால் 5 ஆண்டுகள் கழித்து பொது குடிமகன், மூத்த குடிமகன், சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு என்ன வட்டி கிடைக்கும் தெரியுமா?

* நீங்கள் ஒரு பொது குடிமகனாக இருந்து SBI வங்கியில் 5 ஆண்டு FD திட்டத்தில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகள் முதிர்வின் போது மொத்தம் உங்களுக்கு ரூ.1,35,018 கிடைக்கும். அதாவது இதில் ரூ.35,018 நிலையான வட்டியும் அடங்கும்.

* அதுவே, நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து SBI வங்கியில் 5 ஆண்டு FD திட்டத்தில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்யும் பட்சத்தில், முதிர்வின் போது மொத்தம் உங்களுக்கு ரூ.1,41,826 கிடைக்கும். இதில் ரூ.41,826 நிலையான வட்டியும் அடங்கும்.

* இதேபோல், நீங்கள் ஒரு சூப்பர் சீனியர் சிட்டிசனாக இருந்து SBI வங்கியில் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்ச்சியின் போது மொத்தம் உங்களுக்கு ரூ.1,42,524 கிடைக்கும். இதில் ரூ.42,524 நிலையான வட்டியாக இருக்கும்.

இதேபோல நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் கால வரம்பைப் பொறுத்து உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமானிய மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். கையில் ரூ.1 லட்சம் வைத்திருக்கும் சாமானிய மக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பலனடையலாம். குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் முதல் பெரிய அளவில் சேமிக்க நினைக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதாக இருக்கிறது.

எந்த ஆபத்தும் இல்லாமல் உங்கள் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த நினைக்கும் சாமானிய மக்கள், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள SBI வங்கிக்கு சென்று உடனடியாக இந்த FD திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

இதையும் படியுங்கள்:
தமிழ் தெரிந்தால் போதும்..! SBI வங்கியில் 2050 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்க..!
FD Interest Rate

எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 5 வருட SBI வங்கியின் FD திட்டத்தை தேர்வு செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com