பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஷாக்! 2 ஆண்டுகள் அமைதியாக இருந்தால் டீமேட் கணக்கு முடக்கமா?

நீண்ட கால முதலீட்டாளர்களைக் கலங்கடிக்கும் செபியின் புதிய திட்டம்.!
Demat Account
SEBI
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது அத்தியாவசியம் என்றாகி விட்டது. நாளையத் தேவைக்கு இன்றைய முதலீடு தான் அடித்தளம். தற்போது சந்தையில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும் சூழலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. இந்த முதலீட்டில் ஆபத்துகள் அதிகம் இருந்தாலும், குறைந்த காலத்திலேயே அதிக லாபத்தைப் பெற முடியும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு கட்டாயமாகும். நம்முடைய முதலீடுகள் அனைத்தும் இந்தக் கணக்கு வழியாகவே நிர்விகிக்கப்படும். பெரு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதும், விற்பதுமாகவே இருப்பர். ஆனால் சிறு முதலீட்டாளர்கள் அப்படி அல்ல. நீண்ட கால முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒருமுறை பங்குகளை வாங்கி முதலீடு செய்து விட்டு, பல ஆண்டுகளுக்கு அப்படியே விட்டு விடுவர்.

நீண்ட கால முதலீடுகளுக்கு லாபம் அதிகம் என்பதால், சிறு முதலீட்டாளர்களின் கவனம் எல்லாம் இதில் தான் இருக்கும். முதிர்வுத் தொகை கிடைக்கும் வரை டீமேட் கணக்கில் எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காது. இந்நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு திட்டத்தை செபி (SEBI) அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதன்படி 2 ஆண்டுகளுக்கு டீமேட் கணக்கில் எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால், அது டார்மெண்ட் கணக்காக வகைப்படுத்தப்படும். இது நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களை நேரடியாக பாதிக்கக் கூடும்

டிரேடிங் கணக்குகளில் 2 ஆண்டுகளுக்கு பரிவர்த்தனை ஏதும் செய்யாவிட்டால், அது செயலற்ற கணக்காக மாறி விடும். ஆனால் டீமேட் கணக்குகளுக்கும் இந்த விதியை செபி கொண்டு வர நினைப்பது எதனால் என்று யாருக்கும் புரியவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இனி டீமேட் கணக்குகள் சும்மா இருக்கக் கூடாது. அதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பங்குகளே இல்லாமல் இருக்கும் டீமேட் கணக்குகளை நிரந்தரமாக மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

2 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, KYC முறை கொண்டுவரப்பட்டது. அதேபோல் தான் தற்போது டீமேட் கணக்குகளையும் தொடர்ந்து செயலில் வைத்துக் கொள்ள செபி நினைக்கிறது. பங்குச்சந்தையில் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டு, அது வளரும் வரை காத்திருப்பவர்கள் தான் இங்கு ஏராளம்.

செபியின் இந்த புதிய விதியால் சிறு முதலீட்டாளர்களே அதிகம் பாதிக்கப்படுவர். அதோடு கணக்கு மூடப்படுமோ என்ற அச்சத்தில் பங்குகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். செபியே பங்குகளை வாங்கு மற்றும் விற்பனை செய் என வற்புறுத்துவது போல் இருக்கிறது

SEBI
SEBI.
இதையும் படியுங்கள்:
உஷார்! சருமத்தை அழகாக்க நினைத்து சிறுநீரகத்தை இழந்த இளம்பெண்; ஆன்லைன் போலி கிரீம்களின் பகீர் பின்னணி
Demat Account

டார்மெண்ட் வகையை செபி கொண்டு வந்தால் என்னவாகும்?

டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகளுக்கு எப்போதும் ஆபத்தும் இருக்காது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் எப்போதாவது பங்குகளை வாங்கவோ விற்கவோ நினைத்தால், அது டார்மென்ட் நிலையில் இருக்கும். மீண்டும் கணக்கைப் புதுப்பிக்க KYC விவரங்களைக் கொடுத்ததும், சரிபார்ப்புக்கு பின்பு தான் கணக்கு செயல்பாட்டுக்கு வரும்.

பயன்படுத்தப்படாத டீமேட் கணக்குகளை மோசடி கும்பல் ஹேக் செய்ய வாய்ப்புண்டு. ஒருவேளை இதனைத் தவிர்க்கவும் செபி இதைச் செய்ய நினைத்திருக்கலாம். இதற்காக நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சிரமத்தை அளிப்பது எவ்வகையில் நியாயமாகும்.

நாட்டில் சுமார் 24 கோடி டீமேட் கணக்குகள் உள்ளன. அதில் 25 சதவித கணக்குகளில் மட்டும் தான் தொடர் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. மீதமுள்ள 75% டீமேட் கணக்குகளில் பரிவர்த்தனை ஏதும் நடக்கவில்லை.

இருப்பினும் பரிவர்த்தனை நிகழாத கணக்குகளை பராமரிக்க தொழில்நுட்ப மற்றும் தரவு சேமிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கும் செபி இந்த முடிவை எடுத்திருக்கலாம். இந்த புதிய விதியின் மூலம் குறைந்தது 25% கணக்குகளாவது மீண்டும் உயிர்ப்பெற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
AI மூலம் அக்னிவீர் இணையதளத்தை ஹேக் செய்த பள்ளிச் சிறுவன்: போலீஸிடம் சிக்கியது எப்படி?
Demat Account