தினமும் 2 வேளை கையெழுத்து போடணும்..! - செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் செக்..!

தவெக அரசை கவிழ்க்க சதி மற்றும் குதிரை பேர வழக்கு; தினமும் இருவேளை கையெழுத்திட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிSource:dinamalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நீதிமன்றத்தில் முன்ஜாமின் பிணைப் பத்திரங்களை (Surety)சமர்ப்பித்த நிலையில் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு ஆஜரானார். தவெக (TVK) அரசை கவிழ்க்க சதி செய்த வழக்கில் தொடர்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பிணைப் பத்திரங்களை சமர்ப்பித்தார். நீதிமன்ற உத்தரவின்படி, இன்று அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார்.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதியை இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது.

அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு ஆஜராகி கையத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை, அது விதித்த நிபந்தனையின்படி இருவரும் ஆஜராகவில்லை. இத்தகைய சூழலில் தான் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் "விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது. விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று மீண்டும் உயர் நதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளம்திரையன் அமர்வில் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை இதுவரை இவர்கள் இருவரும் பின்பற்றவில்லை. இருவரும் சரணடையாத நிலையில் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று முன்கூட்டியே உத்தரவு வழங்க முடியாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடவடிக்கைகளை முன்வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தார். அத்துடன் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் நிபந்தனையின்படி பிணைத்தொகை செலுத்துவதற்காக நேற்று (24.7.26 அன்று) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத்தொகையை செலுத்தினார்.

Senthil balaji and Ashok got bail
senthil balaji get bailSenthil balaji: Deccan herald

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகளுக்கு இணங்கி 25,000 மதிப்புள்ள ஒரு தனிநபர் பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு இரண்டு ஜாமீன்தாரர்களையும் சமர்ப்பித்தார். முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன் அந்தப் பிணைப்பத்திரத்தை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜியை தினமும் இரு முறை - காலை 10:30 மணி மற்றும் மாலை 5:30 மணி ஆகிய இரு வேளைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பத்திரங்களை தாக்கல் செய்த செந்தில் பாலாஜி அதனை தொடர்ந்து இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார்.

இதை அடுத்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் தந்திருந்த உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் படி இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து இடுவதற்காக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

இதையும் படியுங்கள்:
செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு: காவல்துறையினர் துன்புறுத்த கூடாது என்று தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
செந்தில் பாலாஜி
இதையும் படியுங்கள்:
"பதவி விலகுங்கள் அமைச்சரே" மாணவர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகை ஜோதிகா..!
செந்தில் பாலாஜி
logo
Kalki Online
kalkionline.com